ரோகித்தால் கம்பீர் பாவம்.. ரசிகர்கள் இனிமே இத மட்டும் செய்யாதீங்க – கபில்தேவ் கோரிக்கை

0
99
Kapil

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வருவது சாம்பியன்ஸ் டிராபி அருகில் இருக்கும் பொழுது இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்கும் என இந்திய லெஜெண்ட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது கடந்த பத்து சர்வதேச இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏழு முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் மிக மோசமாக இருந்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது நல்லது என அவருடைய ரசிகர்களே கூறும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்

தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்று செய்வதற்கு ஹர்திக் பாண்டியா இருக்கிறார். மேலும் உள்நாட்டில் ஐபிஎல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி தொடரை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இந்த நிலையில் கேப்டன் என்கின்ற காரணத்தினால் ரோஹித் சர்மா அணியில் தொடர்ந்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா இல்லாமல் இருந்தால், தற்போது சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஒரே அணியில் விளையாட முடியும் எனவும், இந்திய பேட்டிங் யூனிட்டில் நல்ல வீரர்களை கொண்டு வர முடியும் எனவும் கருதுகிறார்கள். தற்போது ரோகித் சர்மா ரன்கள் எடுக்காதது அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

- Advertisement -

பயிற்சியாளருக்கு குட்லக் தான் சொல்வேன்

இதுகுறித்து கபில்தேவ் பேசும்பொழுது “ரோஹித் சர்மா ஒரு பெரிய வீரர் அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என நான் நம்புகிறேன். இந்த நிலையில் நான் பயிற்சியாளருக்கு குட்லக் தான் சொல்ல முடியும். இதற்கு தீர்வு காண்பதற்கு நிறைய நேரம் எடுக்கும். மொத்த நாடும் இந்திய அணியின் நல்ல செயல் திறனை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. சில காலமாக திறமையாக விளையாடி வந்த இந்திய அணி தற்பொழுது அமைதியற்றதாக காணப்படுகிறது. கேப்டன் ஃபார்ம் மோசமாக இருக்கும் பொழுது அணி பாதிப்படைகிறது”

இதையும் படிங்க : இங்கிலாந்து அணி செய்யும் அதை ஏத்துக்கவே முடியல.. நீங்களே இப்படி பண்ணலாமா? – அஸ்வின் வருத்தம்

“அணி சிறப்பாக செயல்படாததால் ரசிகர்கள் கோபத்தில் இருப்பது நியாயமான விஷயம். இந்த வீரர்கள் டி20 உலக கோப்பையை வென்று வரும்பொழுது ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு நான் இதுவரையில் பார்க்காத ஒன்று. எனவே அவர்கள் நல்ல முறையில் விளையாடாத பொழுதும் மோசமான விமர்சனங்கள் வருகின்றன. எனவே ரசிகர்கள் இந்த அளவிற்கு வீரர்களை பாராட்டாதீர்கள். அவர்களால் இதை கையாள முடியாது. பிறகு சரியான முறையில் விமர்சனம் செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -