தற்போது இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்திருக்கிறார்.
ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி அதை ஒன்றுக்கு நான்கு என மிக மோசமாக தோற்றது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வலிமையான தொடக்கம் கிடைக்கும் தோல்வி அடைந்தது.
பாஸ்பாலால் எந்த லாபமும் கிடையாது
இங்கிலாந்து அணி சில ஆண்டுகளாக கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் மிக அதிரடியாக செயல்படுவது என முடிவெடுத்து அதை தங்களுடைய பாணியாக வைத்து விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் அவர்களுடைய பேட்டிங் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக இருப்பதால் அவர்கள் எந்த பயனையும் இதுவரையில் அடையவில்லை என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங் முறையால் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சுற்றோடு வெளியேறினார்கள். 2024 டி20 உலகக் கோப்பையில் அரைஇறுதியில் தொற்றார்கள். இதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் அணியாக வெளியேறவும் செய்து விடுகிறார்கள். அவர்கள் கண்டிஷன் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலையை பற்றி எந்த கவலையும் படாதது பெரிய பின் விளைவுகளை உருவாக்கி வருகிறது.
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
இது குறித்து கவலை தெரிவித்து இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இங்கிலாந்து அணியின் பேட்டிங் அப்ரோச் எனக்கு மிகவும் வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் திறமை இல்லாத ஒரு அணி இப்படி தோல்வி அடைவது பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை எடுத்துக் கொண்டால் எல்லா வீரர்களுமே மிகத் திறமையானவர்கள். இப்படி இருக்கும் பொழுது அவர்களுடைய அப்ரோச் காரணமாக அவர்கள் மோசமாக தோல்வி அடைகிறார்கள்”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் ஆடனும்.. ஆதரவு கொடுத்து இருக்கும் கில்.. நெகிழ்வான சம்பவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
“கிரிக்கெட்டில் கண்டிஷனுக்கு மதிப்பு தராமல் நம்மால் விளையாட முடியாது. இவர்களுடைய அணுகுமுறையால் இவர்கள் எந்த பெரிய வெற்றியையும் பெறவில்லை. அப்படி வெற்றிகள் கிடைத்து இருந்தாலும் இதை தொடர்ந்து செய்வதில் நியாயம் இருக்கிறது. கடந்த ஒரு நாள் போட்டியில் மிகச்சிறந்த தொடக்கம் கிடைத்த போதும் கூட, அதை பயன்படுத்தி அவர்களால் பெரிய ரண்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் சரியாக விளையாடியிருந்தால் சுலபமாக 350 ரன்கள் எடுத்திருக்க முடியும். திறமை இருந்தும் அவர்களுடைய அணுகுமுறை தவறாக இருப்பது வருத்தமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.