நடப்பு 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி இருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்று பேசியிருக்கிறார்.
நேற்று நியூசிலாந்து அணி முதல் சுற்றில் கடைசி போட்டியில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி லாக்கி பெர்குசன் அபார பந்துவீச்சில் 78 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 12.2 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஏற்கனவே நியூசிலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருந்ததால் இந்த வெற்றி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 75 ரன்களில் சுருண்டு தோற்றது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை 112 ரன்கள் வீழ்த்தி, அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 149 ரன்கள் எடுக்க விட்டு தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கையில் இருந்த போட்டியை தோற்றதால், நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “எனக்கு இப்போது என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாது. இப்போது எல்லாவற்றுக்கும் கொஞ்சம் நேரம் இருக்கிறது மேலும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டும். அடுத்த ஆண்டு நிறைய டெஸ்ட் கிரிக்கெட் இருக்கிறது. எனவே சர்வதேச கிரிக்கெட் வேறு வடிவத்திற்கு செல்கிறது. இதில் விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : பயிற்சியில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் காயம்.. சூப்பர் 8 சுற்றில் விளையாடுவாரா?.. ஆரம்பித்த பிரச்சனைகள்
இங்கு வந்து எல்லாவற்றையும் தொடர்ந்து அதற்கு நீண்ட நேரம் எடுத்தது. சில நாட்கள் நாங்கள் போட்டியில்லாமல் இருந்தோம். இதுஎங்களுக்கு வெறுப்பாக இருந்தது. மேலும் இந்த சூழ்நிலைக்கு மிகச் சரியான இரண்டு அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாடி தோற்று விட்டோம். இதுதான் வித்தியாசமாக அமைந்தது. உங்களின் முதல் இரண்டு போட்டிகள் வெறுப்பாக அமைந்துவிட்டது. இந்த சூழ்நிலைகளுக்கு புதிதாக வரும் அணிகளுக்கு இது ஒரு கற்றல் பாடம். ஆனால் அடுத்த முறை இங்கு வந்து விளையாடுவதற்கு உதவியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.