பயிற்சியில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் காயம்.. சூப்பர் 8 சுற்றில் விளையாடுவாரா?.. ஆரம்பித்த பிரச்சனைகள்

0
611
ICT

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் மூன்று போட்டிகளை வென்று ஒரு போட்டி மழையால் டிரா ஆக அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் பயிற்சியின் போது இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் காயமடைந்திருக்கிறார்.

இந்திய அணி முதல் சுற்று போட்டிகள் முழுமையாக அமெரிக்காவில் விளையாடி முடித்து, தற்போது சூப்பர் எட்டு சுற்றில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் பறந்து இருக்கிறது. மேற்கொண்டு நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் எல்லா போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணி வருகின்ற வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. சுழல் பந்துவீச்சு எடுபடும் என்கின்ற காரணத்தினால், ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாட இருக்கும் பார்படாஸ் நேற்று சென்றது. மேலும் இந்திய அணி தங்களுடைய முதல் பயிற்சியை இன்று ஆரம்பித்துவிட்டது. பயிற்சியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

இந்த பயிற்சியின் போது சூரியகுமார் யாதவுக்கு விரலில் அடிபட்டது. உடனே அவர் பிசியோவை அழைத்து, கைகளில் மேஜிக் ஸ்ப்ரேவை அடித்துக் கொண்டார். சிறிது நேரம் பயிற்சி செய்யாமல் இருந்த சூரியகுமார் யாதவ், அதற்கடுத்து தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டார். இதிலிருந்து அவருக்கு ஏற்பட்ட காயம் பெரிய ஆபத்தான காயம் இல்லை என்பதாகத் தெரிகிறது. இது இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயம்.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் கூட தோத்ததெல்லாம் மேட்டரே கிடையாது.. நாங்க பெருசா அந்த வேலையை பண்ணிட்டோம் – ரஷீத் கான் பேச்சு

மேலும் நேற்று விராட் கோலி 40 நிமிடங்கள்பேட்டிங் பயிற்சியை நடத்தினார். இதில் பும்ரா ஓவரை எதிர்கொண்டு விளையாடிய அவர் ஒரு சிக்ஸரையும் அடித்தார். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் அவர் நீண்ட நேரம் உரையாடல் நடத்தினார். பார்படாஸ் நல்ல சூடாகவும் மேலும் ஈரப்பதம் மிக்கதாகவும் சூழ்நிலை இருந்தது. இதற்கு பழகிக்கொள்ள இந்திய வீரர்கள் முன்கூட்டியே பயிற்சிக்கு வந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -