கண்டிப்பா ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது – சிஎஸ்கே வீரரின் வித்தியாசமான பேச்சு!

0
378
Jaiswal

இந்திய அணி சில ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு டி20 போட்டிகளில் அதிர்ச்சிகரமாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது!

இரண்டு ஆட்டங்களிலுமே இந்திய அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இருந்து தோற்று இருக்கிறது. முதல் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இரண்டாவது ஆட்டத்தில் கேப்டன்ஷியில் ஹர்திக் பாண்டியா சொதப்பினார்.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷான் மற்றும் கில் இருவருமே மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். மேலும் ஷாட் தேர்வு மிகவும் சுமாராக இருந்தது. இவர்கள் ஓரளவுக்கு சரியான துவக்கம் தராதது அணியை பாதித்தது. குறிப்பாக பவர் பிளேவை வீணடித்தார்கள்.

இதன் காரணமாக நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வாலை அணிக்குள் துவக்க வீரராக கொண்டுவர வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இஷான் கிஷான் கடந்த 16 ஆட்டங்களாக டி20 யில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

அதே சமயத்தில் ஐபிஎல் தொடர் முதற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் வரை மிக சிறப்பான பேட்டிங் ஃபார்மில் ஜெய்ஸ்வால் இருக்கிறார். எனவே அவர் விளையாடுவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “இல்லை ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில் கொண்டு வருவதற்கான நேரம் இது கிடையாது என்று நான் நினைக்கிறேன். இவர்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் ஐபிஎல் முடிந்து அதற்கு மேல் ஒன்றரை மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள்.

அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பு உங்களிடம் 20, 22 ஆட்டங்கள் இருக்கும் பொழுது, நீங்கள் மேற்கொண்டு சில வாய்ப்புகளை தந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதற்கு முன்னால் ஏற்கனவே உருவாக்கி இருக்கின்ற காம்பினேஷனை உடைக்கக்கூடாது. இந்த இடத்தில் நீங்கள் உங்கள் செயல்முறையை நம்பி அவர்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

மூன்றாவது டி20 போட்டியில் நிச்சயம் நம்முடைய துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தைரியமான இன்டென்டை காட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு விளையாடிய கயானாவில் அவர்கள் விளையாடியது கிடையாது. அவர்களுக்கு அந்த ஆடுகளம் பற்றி எதுவுமே தெரியாது.

இந்தச் சிறுவர்கள் எல்லோருமே முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறார்கள், இவர்களுக்கு அங்குள்ள ஆடுகளங்கள் பற்றி சரியான புரிதல் கிடையாது என்பவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விக்கெட்டுகள் எப்படி இருக்கிறது என்பதான அம்சங்களை அவர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு நாம் தொடர்ச்சியாக சில வாய்ப்புகள் கொடுப்பது அவசியம்!” என்று கூறி இருக்கிறார்!