வெறும் 6 ரன்.. டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி படைக்க இருக்கும் மாபெரும் சாதனை.. சேப்பாக்கத்தில் வெயிட்டிங்

0
234
Virat

உலக கிரிக்கெட்டில் விராட் கோலி ஏன் தனித்துவமான பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று கேட்டால், தற்போதைய நவீன கால கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தகுந்தது போல் தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வதுதான்.

இப்படியான சவாலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஒரே பேட்ஸ்மேனாக உலக கிரிக்கெட்டில் இந்திய ரன் மெஷின் விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேனாக பல ஆண்டுகளாக அவர் காட்டி வரும் நிலைத்தன்மை தான் அவரை உலகில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உயர்த்தி இருக்கிறது.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டில் தற்பொழுது பேட்ஸ்மேன்கள் டிவிலியர்ஸ் வகை ஷாட்டுகள் இல்லாமல் வருவதில்லை. அந்த அளவிற்கு மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் தேவையாக இருக்கிறது. ஆனால் விராட் கோலி ஒருவர் மட்டும்தான் எந்தவிதமான மாடர்ன் கிரிக்கெட் ஷாட்டும் இல்லாமல், அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில், வழக்கமான ஷாட்களை வைத்தே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில், ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், விராட் கோலி பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் வெளிப்படுத்திய செயல்பாடு, டி20 கிரிக்கெட்காக வடிவமைக்கப்பட்ட பேட்ஸ்மேன்களால் நிச்சயமாக செய்ய முடியாது.

- Advertisement -

இந்த நிலையில் 17ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் போட்டியில் விராட் கோலி ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரராக மாபெரும் சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

இதுவரையில் விராட் கோலி சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் என எல்லாம் சேர்த்து 376 போட்டிகளில் 41 ஆவரேஜில், 133 ஸ்ட்ரைக்ரேட்டில் 11994 ரன்கள் குவித்திருக்கிறார். இன்னும் ஆறு ரன்கள் அவர் எடுக்கும் பொழுது, இந்திய வீரர்களில் டி20 கிரிக்கெட்டில் முதன் முதலில் 12,000 ரன்களை தொட்ட பேட்ஸ்மேன் என்கின்ற மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி எனக்கு செய்த அந்த காரியத்திற்காக.. நான் வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன் – அஸ்வின் பேட்டி

உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் :

கிறிஸ் கெய்ல் – 14562
சோயிப் மாலிக் – 13360
கீரன் பொல்லார்ட் – 12900
அலெக்ஸ் ஹேல்ஸ் – 12225
டேவிட் வார்னர் – 12065
விராட் கோலி – 11194

இந்திய அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் :

விராட் கோலி – 11994
ரோகித் சர்மா – 11156
ஷிகர் தவான் – 9465
சுரேஷ் ரெய்னா – 8654
கேஎல் ராகுல் – 7066

- Advertisement -