வெறும் 5.4 ஓவர்.. மேட்ச்யை திருப்பிய ஆகாஷ் தீப்.. கடைசியில் அஸ்வின் ஜடேஜா அசத்தல்

0
333
Deep

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கஷ்டத்துடன் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புள்ள நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியது.

முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. மார்க் வுட் இடத்தில் ஒல்லி ராபின்சன், ரேகான் அகமது இடத்தில் சோயப் பசீர் இருவரும் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதால், அவருடைய இடத்திற்கு அறிமுக வேகம் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் கொண்டுவரப்பட்டார்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தில் பந்தில் பெரிய சுழற்சியை பார்க்க முடியவில்லை. அதே சமயத்தில் ஆடுகளம் கொஞ்சம் வறட்சியாகவும் விரிசலாகவும் இருப்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு இருந்தது.

தனது சர்வதேச கிரிக்கெட் முதல் விக்கெட்டை நோ-பாலால் இழந்த ஆகாஷ் தீப் அதற்குப் பின் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் செசனை இந்திய அணியின் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

பென் ட்க்கெட் 11, ஒல்லி போப் 0, ஜாக் கிரவுலி 35 என ஆகாஷ் தீப் வரிசையாக வெளியே அனுப்பி வைத்தார். அறிமுக போட்டியில் விளையாடும் அவர் தனது முதல் 5.4 ஓவர்களில் இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இணைந்த ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடியது. ஆனால் இந்த ஜோடியில் பேர்ஸ்டோவை 38 அஸ்வின் பிரித்தார். அடுத்து உடனே கேப்டன் ஸ்டோக்சை 3 ஜடேஜா வெளியில் அனுப்பினார்.

இதையும் படிங்க : 2வது முறை சாதித்த ஆகாஷ் தீப்.. ஒரே ஓவரில் இரட்டை செக்.. 3 விக்கெட்.. தெறிக்கும் பவுலிங்

முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த முதல் செஷனில் இந்திய அணிக்கு கதாநாயகனாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் விளங்கியிருக்கிறார்.