2வது முறை சாதித்த ஆகாஷ் தீப்.. ஒரே ஓவரில் இரட்டை செக்.. 3 விக்கெட்.. தெறிக்கும் பவுலிங்

0
1246
Deep

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி தற்பொழுது ராஞ்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் களம் வந்தார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் 27 வயதான வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட்டார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக கருதப்பட்டாலும் கூட, வறட்சியாகவும் விரிசலாகவும் இருப்பதால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அருமையான பந்து ஒன்றை வீசி ஜாக் கிரௌலிக்கு ஸ்டெம்பை காற்றில் பறக்க வைத்தார். ஆனால் அந்தப் பந்து நோ-பால் என மூன்றாவது நடுவரால் அறிவிக்கப்பட, மைதானம் மொத்தமும் அமைதியானது.

ஆனாலும் கூட கேப்டன் ரோகித் சர்மா முகமது சிராஜிக்கு ஓவரை நிறுத்திவிட்ட போதும் ஆகாஷ் தீப்புக்கு தொடர்ந்து கொடுத்தார். கேப்டனின் இந்த முடிவு இளம் அறிமுக வீரருக்கு நல்ல ஆரம்பத்தை தொடக்கி வைத்தது.

- Advertisement -

ஆகாஷ் தீப் பென் டக்கெட்டுக்கு பந்தை உள்நோக்கி வீசி, அப்படியே வெளியில் நகர்த்த செய்தார். இந்த அருமையான பந்தில் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து முதல் டெஸ்ட் போட்டியின் கதாநாயகன் ஒல்லி போப்பை உள்ளே வந்த வேகத்திலேயே எல்பி டபிள்யு மூலமாக வெளியே அனுப்பினார். மொத்த அணியும் ஆகாஷ் தீர்ப்புக்காக ரிவியூ எடுக்க சொல்ல, இந்த விக்கெட் உடனே கிடைத்தது.

இதையும் படிங்க : சர்வதேச முதல் விக்கெட்.. பறந்த ஆப்-ஸ்டெம்ப்.. ஆனால் ஆகாஷ் தீப்புக்கு நடந்த சோகம்.. களத்தில் என்ன நடந்தது?

தனது முதல் விக்கெட்டை நோ-பால் காரணமாக இழந்த ஆகாஷ் தீப், அதற்கு அடுத்து தொடர்ந்து போராடி, ஒரே ஓவரில் இரட்டை விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். பீகாரில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு தற்பொழுது பெங்காலுக்கு கிரிக்கெட் விளையாடக்கூடிய அவரது வாழ்க்கை போலவே, அவரது முதல் டெஸ்ட் அறிமுக விக்கெட்டும் அமைந்திருக்கிறது.