வெறும் 17 ரன்.. ஜெய்ஸ்வாலின் மாஸ்டர் பிளான்.. அசந்து போகும் கிரிக்கெட் வல்லுனர்கள்

0
2984
Jaiswal

இந்திய அணியின் 22 வயதான இளம் துவக்க இடதுகை ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த சதத்தின் மூலமாக குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்கின்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் வினோத் காம்ப்ளி மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிக முக்கியமாக எந்த பேட்ஸ்மேனும் அணியில் அரை சதம் அடிக்காத பொழுது, இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கின்ற அபார சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் விளையாடு இருக்கும் இந்த இன்னிங்ஸ் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எடுத்துப் பேசப்படும் ஒரு இன்னிங்ஸ் ஆக அமையப் போவதில் சந்தேகம் கிடையாது.

முதல் டெஸ்ட் போட்டியை அதிரடியாக அணுகிய ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் அப்படி விளையாடவில்லை. காரணம் ஆடுகளம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருந்ததாக அவரே கூறினார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தவறாக பந்து வீசும் போது மட்டும் அச்சம் இல்லாமல் விளையாடுவதை திட்டமாக வைத்திருந்ததாகக் கூறியிருந்தார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தவறு செய்த ஒவ்வொரு முறையும் அவர் தண்டித்தார். ரன்களை கொண்டு வந்தார் என்பதுதான்.

மேலும் இந்த ஆட்டத்தின் இங்கிலாந்தின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 25 ஓவர்களுக்கு நான்கு மெய்டன்கள்,47 ரன்கள் என மூன்று விக்கெட்டை பற்றி இருக்கிறார். ஓவருக்கு 1.9 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மிக புத்திசாலித்தனமாக ஆண்டர்சனை அடித்து விளையாடுவதை அப்படியே தவிர்த்து விட்டார். ஆண்டர்சன் பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 396 ரன்.. ஜெய்ஸ்வால் அதிரடி.. இந்தியா இங்கிலாந்து.. முதல் இன்னிங்ஸில் யார் கை ஓங்கி இருக்கிறது?

இதை ஆட்டம் இழக்கும் முதல் பந்து வரை ஜெய்ஸ்வால் கவனமாகப் பின்பற்றி இரட்டை சதம் அடித்தார். இறுதியாக ஜெய்ஸ்வால் அந்தத் திட்டத்தில் இருந்து விலகி வெளியில் வந்து அடித்த பொழுது தான் ஆண்டர்சன் ஆட்டமும் இழந்தார். ஆனால் ஆடுகளம் மற்றும் பந்துவீச்சாளரை கணக்கில் வைத்து இளம் வீரர் இவ்வளவு பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி இருப்பது குறித்து, கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி பேசி வருகிறார்கள்.