இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 396 ரன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது.
நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜெய்ஸ்வால் 179, ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்கள் என நின்றார்கள்.
இன்று இரண்டாவது நாளை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ரன்கள் அஸ்வின் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் வசம் இழந்தது.
இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 277 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து 290 பந்துகளில் 209 ரன்கள் எடுத்து இவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து பும்ரா 6, முகேஷ் குமார் 0 என ஆட்டம் இழந்தார்கள். குல்தீப் யாதவ் 8 ரங்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். முடிவில் இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 47 ரன்களுக்கு மூன்று விக்கெட், ரேகான் அஹமத் 65 ரன்களுக்கு மூன்று விக்கெட், சோயப் பசீர் 138 ரன்களுக்கு மூன்று விக்கெட் என கைப்பற்றினார்கள்.
பேட்டிங் செய்ய சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 50 ரன்கள் குறைவாக அடித்திருக்கிறது என்று கருதப்படுகிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணி வழக்கமாக ஆக்ரோஷமான முறையிலேயே விளையாடும்.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால்கிட்ட விக்கெட்டை கேட்டு வாங்கிய ஆண்டர்சன்.. களத்தில் என்ன நடந்தது?.. சுவாரசிய சம்பவம்
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் சுழல் பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் இருவரது பந்து வீச்சை பொறுத்து இந்திய அணியின் வெற்றி இங்கு அமையும் என்று கூறப்படுகிறது.