ஜூன் 23 ட்ராப்புடு… ஜூலை 7 துலிப் டிராபி செஞ்சுரி… மாஸ் கம்பேக் கொடுத்த புஜாரா!

0
378

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ரஞ்சி டிராபிக்கு அடுத்து முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவது துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிகள் ஆகும் . தற்போது இந்த வருடத்திற்கான துலீப் டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன .

கால் இறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கர்நாடக மாநிலம் அலூரில் நடைபெறும் முதலாவது அரை இறுதியில் மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

டாஸ் வென்ற மேற்கு மண்டல கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் மேற்கு மண்டல அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 65 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் அதித் சேத் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் எடுத்து மேற்கு மண்டலம் 200 ரண்களை கடக்க உதவினார்.

இதனைத் தொடர்ந்து ஆடிய மத்திய மண்டலம் மேற்கு மண்டலத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . மேற்கு மண்டல அணியின் துவக்க பந்துவீச்சாளர் நக்கஸ்வாலா 74 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய மேற்கு மண்டல அணியின் துவக்க வீரர்கள் விரைவாக வெளியேறிய நிலையில் அனுபவ வீரரான புஜாரா மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார் . அவருக்கு உறுதுணையாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 58 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தற்போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேற்கு மண்டல அணி 291 ரன்களுக்கு எட்டு விக்கெட் களை இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. புஜாரா 132 ரன்கள்டனும் நகஸ்வாலா ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர் . இதன் மூலம் மேற்கு மண்டல அணி 383 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

ஜூன் மாதம் 23ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் இருந்து சத்தீஷ்வர் புஜாரா நீக்கப்பட்ட நிலையில் ஜூலை 7ஆம் தேதி துலிப் டிராபி தொடரின் அரை விதி போட்டியில் சதம் எடுத்ததன் மூலம் தான் நீக்கப்பட்டதற்கு எதிராக பதிலடி கொடுத்திருக்கிறார் புஜாரா. அணையில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வந்த உடனேயே தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.