13 ஓவர் 9 விக்கெட்.. சிஎஸ்கே ஸ்டைலில் ஜேஎஸ்கே எலிமினேட்டர் சுற்றில் வெற்றி.. ராயல்ஸ் வெளியேறியது

0
611
JSK

ஐபிஎல் தொடர் போல தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கில் ப்ளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப் டவுன் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சுற்றில் வெளியேறியது.

அதே சமயத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வாழ்வா சாவா கடைசி போட்டியில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபயர் சுற்றில் ஈஸ்டர்ன் கேப் சன் ரைசர்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

நேற்று எலிமினேட்டர் ரவுண்டில் டேவிட் மில்லர் தலைமையிலான பேர்ல் ராயல்ஸ் அணியும், பாப் டு பிளிசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் இரண்டு பந்துவீச்சாளர்களான சாம் குக் மற்றும் நன்ட்ரே பர்கர் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்றைய போட்டியில் மொத்தம் ஏழு விக்கெட் கைப்பற்றியினார்கள். சாம் குக் இதில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பேர்ல் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் டேவிட் மில்லர் 47(40), ஜேசன் ராய் 24(14), டேன் விலாஸ் 21(16) இடம் மூவர் மட்டுமே குறிப்பிடும்படி ரன்கள் எடுத்தார்கள். அந்த அடி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 10.3 ஓவரில் 105 ரன்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் வந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிளாய் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்கார கேப்டன் பாப் டு பிளிசிஸ் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : “கோலிதான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆனா இந்த இந்திய பேட்ஸ்மேன் வேற மாதிரி” – முகமது சமி கருத்து

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 13.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அந்தப் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் ஈஸ்டர்ன் கேப் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.