இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி முடிவடைகிறது. அங்கிருந்து ஒரே வாரத்தில் ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவை கொண்டு வந்தது சரியானதாக இல்லை என, கேகேஆர் அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சாரியார் கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெற்று இருந்தார். அவர் விளையாடிய காலத்தில் பெற்ற உலகக் கோப்பை வெற்றியாக இது மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இது குறித்து ஜாய் பட்டாச்சாரியா கூறும் பொழுது “டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிப்பது, இந்திய அணிக்கு இடையூறாக அமையலாம். இந்தக் கட்டத்தில் இந்திய டி20 அணியை வழிநடத்த சரியான தேர்வாக ரோகித் சர்மா இருக்க மாட்டார்.
ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர் மிகவும் சிறந்த கிரிக்கெட் வீரர். இருந்தாலும் தற்போது அவர் நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லை. விராட் கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் கில் மூன்று பேரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள்.
இவர்கள் மூன்று பேரும் துவக்க வீரர்களுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். தற்பொழுது ரோகித் சர்மாவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமித்ததன் காரணமாக, அவர் துவக்க வீரராக எல்லா போட்டியிலும் விளையாடுவார். இதன் காரணமாக நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கக்கூடிய இவர்கள், கீழ் வரிசையில் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : ஏர்போர்ட் டு கிரவுண்ட்.. ரிஷப் பண்ட் எவ்வளவு வெறித்தனமாக இருக்காரு தெரியுமா?.. தடுக்க முடியல – டெல்லி பேட்டிங் கோச் பேட்டி
இந்த இடத்தில் நான் ரோகித் சர்மாவை விட ஜஸ்பரித் பும்ராவை இந்திய டி20 அணியின் கேப்டனாக விரும்புவேன். ஒரு பந்துவீச்சாளராக அவருக்கு இருக்கும் திறமை, அவரை இந்திய அணியின் மிக முக்கியமான உறுப்பினராக மாற்றுகிறது. எனவே எல்லா போட்டியிலும் விளையாடக்கூடிய அதே சமயத்தில் நல்ல பாம்பில் இருக்கும் பும்ரா இந்திய டி20 அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.