ஏர்போர்ட் டு கிரவுண்ட்.. ரிஷப் பண்ட் எவ்வளவு வெறித்தனமாக இருக்காரு தெரியுமா?.. தடுக்க முடியல – டெல்லி பேட்டிங் கோச் பேட்டி

0
7
Rishabh

நேற்று டெல்லி அணி தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் எல்லா பக்கத்திலும் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் பற்றி டெல்லி பேட்டிங் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரே பேசி இருக்கிறார்.

விபத்தில் சிக்கி காயம் சரியாகி நேராக ஐபிஎல் தொடருக்கு வந்த ரிஷப் பண்ட், டி20 உலக கோப்பைக்கு தேர்வாவது மிகக் கடினமாக இருக்கும் என்றும், ஆனால் அவர் இதை நல்ல போட்டி பயிற்சியாக எடுத்துக் கொண்டு, இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடருக்கு திரும்பலாம் என்று பலரும் கூறி வந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததோடு, விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் எந்தவித சிரமமும் இல்லாமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் அதே வேளையில், தற்போது ரிஷப் பண்ட் டி20 உலக கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தேர்வாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டது.

இதுகுறித்து டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பேசும்பொழுது “நாங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இரண்டு வாரம் விசாகப்பட்டினத்தில் பயிற்சி முகாமை அமைத்தோம். அந்த பயிற்சி முகாமுக்கு வந்த ரிஷப் பண்ட் தன்னை மிகவும் நன்றாக தயார்படுத்தினார். எனக்கு மிக நன்றாக நினைவு இருக்கிறது, அந்த பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் ஏர்போட்டில் இருந்து நேராக வந்தார். வேறு எங்கேயும் தங்கி அவர் ஓய்வு எடுக்கவில்லை.

அவர் அந்த நேரத்தில் கிரிக்கெட்டில் மிகவும் பசியுடன் இருந்தார். தனக்கு கிடைக்கும் வாய்ப்பை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதை அவர் உறுதி செய்தார். அவருடைய மறுவாழ்வில் அவர் மிகக் கடினமாக உழைத்ததற்கான பலனைத்தான் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 0 ரன் 7 விக்கெட்.. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இந்தோனேசியா வீராங்கனை உலக சாதனை

மேலும் ஐபிஎல் தொடரில் அவருக்கு இரண்டு ஆட்டங்கள் நல்ல நம்பிக்கையை கொடுத்தன. மேலும் நேற்று அவரிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை நாம் பார்த்தோம். ஆட்டத்தை முடிப்பது என்பது எப்பொழுதும் முக்கியமான ஒன்று. அதேசமயத்தில் அனுபவம் மிக்க முக்கியமான பந்துவீச்சாளரான மோகித் சர்மாவின் ஓவரில் அவர் 31 ரன்களை எப்படி எடுத்தார் என்று பார்த்தோம். ரிஷப் பண்ட் தற்பொழுது மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.