இந்திய கிரிக்கெட்

இப்ப இந்தியாவுல ஒரு சூப்பர் ஸ்டார்தான்.. ஆனா அவர் மொத்த இங்கிலாந்து டீமுக்கும் தலைவலி – பட்லர் பாராட்டு

தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் மட்டும் இருக்கிறார் எனவும், ஆனால் அவருக்கு எதிராக விளையாடுவது சாதாரண காரியம் இல்லை எனவும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஜோஸ் பட்லர் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளில் மட்டுமே சாதாரண வீரராக இடம் பெறுகிறார். சமீபத்தில் அவரை இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்

இதுகுறித்து ஜோஸ் பட்லர் பேசும்பொழுது ” தற்போது இங்கிலாந்துக்கு வருகை தரும் இந்திய அணியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் இருக்கிறார் என்றால் அது பும்ரா மட்டும்தான். வேறு யாரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு எதிராக விளையாடுவது என்பது சாதாரண விஷயமாக ஒருபோதும் இருக்கவே இருக்காது”

“நீங்கள் அவரை எதிர்கொள்ளும் பொழுது அவர் மோசமான கோணங்களை உருவாக்குவார். அவர் ஓடி வருவது மற்றும் வெளிப்படுத்தும் அதிரடி மிகவும் தனித்துவமானது. வழக்கமான பவுலர்களை விட அவர் ஒரு அடி கையை முன்னே நீட்டி பந்தை வீசுகிறார். இதன் காரணமாக அவர் வீசும் வேகத்தை விட பந்து நமக்கு வேகமாக வருவது போல தோன்றும். இதுதான் மிகவும் கடினமானது”

- Advertisement -

என்னை அது ஏமாற்றும்

“ஒரு வலதுகை பேட்ஸ்மேனாக அவர் எனக்கு பந்து வீசும் போது பந்து உள்ளே வருவது போல தோன்றும். அதே சமயத்தில் அவர் எனக்கு வெளியிலும் பந்தை எடுத்துச் செல்ல திறமை கொண்டவர். உங்களை அவர் முற்றிலும் விளையாட முடியாத பொசிஷனுக்கு கொண்டுவந்து வைத்து விடுவார்”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்ல இந்த பொறுப்பு மட்டும் எனக்கு வேணாம்.. ஜெய்ஸ்வால் செஞ்ச அது வேற லெவல் – ஜோ ரூட் பேச்சு

“அவர் ஒரு சூப்பர் ஸ்டார் பந்துவீச்சாளர். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். நிச்சயமாக சிறந்த வீரர்களை எதிர்கொள்ளப் போகிறீர்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த இந்திய அணிக்கு எதிராக குறிப்பாக மூன்றாவது எதிராக நல்ல முறையில் விளையாட விட்டால் வெற்றி பெற முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by