இந்திய கிரிக்கெட்ல இந்த பொறுப்பு மட்டும் எனக்கு வேணாம்.. ஜெய்ஸ்வால் செஞ்ச அது வேற லெவல் – ஜோ ரூட் பேச்சு

0
195
Root

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் எப்பொழுது தயாராகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு ஜெய்ஸ்வாலை உதாரணம் வைத்து பேசி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஹெட்டிங்லி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த மெகா டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஜோ ரூட் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எப்போது இளம் வீரர்கள் தயாராகிறார்கள்?

இது குறித்து பதில் அளித்து பேசி இருக்கும் ஜோ ரூட் கூறும்பொழுது “இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி காலகட்டம் என்பது வெவ்வேறு வயதில் வருகிறது. நீங்கள் எங்கள் அணியில் இருக்கும் ஹாரி புரூக்கை பாருங்கள். அவர் நேராக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குள் வந்ததுமே மிகச் சிறப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டார்”

“இதேபோல் சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலேறி வருவதற்கு சில காலம் தேவைப்படும். இதற்காக அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற மாட்டார்கள் என்பது கிடையாது. உதாரணமாக ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸி அவருடைய வயதில் 20களின் பிற்பகுதி மற்றும் 30களின் முற்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் பின்பு அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் பயணம் தனித்துவமானது

“நீங்கள் இந்தியாவின் ஜெய்ஸ்வாலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எடுத்ததும் தனது முதல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சென்று மிகச் சிறப்பாக ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியா சென்று சதம் அடித்தார். இங்கு ஒவ்வொருவரின் டெஸ்ட் பயணமும் தனித்துவமானது. சிலருக்கு காலம் எடுத்துக் கொள்கிறது அவ்வளவுதான்”

இதையும் படிங்க : அவமானமா இருக்கும்னு கோலிக்கு மெசேஜ் பண்ணேன்.. இனி இந்திய பிளேயர்ஸ் கிட்ட அதை பார்க்க முடியாது – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

“எதிர்காலத்தில் நான் தேர்வாளராக வரமாட்டேன். குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கு இருக்கும் இளம் கிரிக்கெட் திறமைகளின் அளவை பார்க்கும் பொழுது, தேர்வாளரின் வேலை யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகவும் கடினமாக இருக்கும். அதை கடந்து செல்வது கடினமான சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -