ஷேன் வார்னேவை குறிப்பிட்டு பேசுகையில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கிய ஜோஸ் பட்லர

0
67

2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தற்பொழுது அகமதாபாத்தில் கோலாகலமாக பிரம்மாண்டமான நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியை கண்டுகளிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணியும், முதல் தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்த பின்னர் 2-வது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று முன்னேறிய ராஜஸ்தான் அணியும் தற்போது கோப்பையை வெல்ல கடுமையான போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் விளையாடி வரும் ராஜஸ்தான் அணியை தற்பொழுது 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் குவித்துள்ளது.

ஷேன் வார்னே குறித்து பேசிய பொழுது கண்ணீர் விட்ட ஜோஸ் பட்லர்

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் தற்போதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்பது அனைத்து ராஜஸ்தான் அணி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு ஒருவகையில் ஜோஸ் பட்லர் மிக முக்கிய காரணமாக விளங்கி இருக்கிறார். நடப்பு தொடரில் அவர் 857*(இறுதிப்போட்டியில் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் ரன்களையும் சேர்த்து) ரன்கள் எடுத்து இன்னும் சிறப்பாக ஆடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் துவங்குவதற்கு முன்பாக இன்று அவர் இறுதி போட்டி குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில் ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்து பேசுகையில் அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி இருக்கிறார். அவர் அவ்வாறு கண்கலங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

ஒரு இங்கிலாந்து வீரர் ஆஸ்திரேலிய வீரரை நினைத்து கண் கலங்குகிறார். உண்மையில் இவர் ஒரு நல்ல மனிதர் என்றும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மைதானத்திற்குள் மட்டுமே சண்டை போட்டுக் கொள்ளுமே தவிர வெளியே எப்போதும் நண்பர்கள் தான் என்றும் பல கமெண்ட்டுகளை அந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.