“தரம்சாலா பிட்ச் எதுனு கண்டுபிடிச்சிட்டோம்.. ஆனா இவங்கதான் கஷ்டப்பட்டு இருக்காங்க” – பேர்ஸ்டோ பேச்சு

0
607
Bairstow

உலகின் மிக அழகான சூழ்நிலை கொண்ட மைதானங்களில் ஒன்றாக இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள தரம்சாலா மைதானம் இருக்கிறது.

இயற்கை எழிலோடு அமைந்திருக்கும் இந்த மைதானம் பார்ப்பதற்கு மிகவும் அழகான மைதானம். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் எந்த நாட்டு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடுவதை விரும்புவார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் மிகவும் குளிரான சீதோசன நிலையைக் கொண்ட இடத்தில் இந்த மைதானம் அமைந்திருக்கிறது. எப்பொழுது மழை வரும் என்று தெரியாதது ஒரு பிரச்சனை என்றால், பனி மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ள இடம். இது மட்டும் இல்லாமல் பனிமூட்டம் வந்தால் விளையாடுவதையே நிறுத்த வேண்டும். மேலும் சீக்கிரத்தில் சூரிய ஒளி மறைந்து விடும்.

இதன் காரணமாக இந்த மைதானத்தின் ஆடுகளத்தை மட்டும் இல்லாமல், மொத்த மைதானத்தின் அவுட் ஃபீல்டையும் சிறப்பாக பராமரிப்பது மைதான ஊழியர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியம்.

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது கூட, இந்த மைதானத்தின் அவுட் ஃபீல்டு கொஞ்சம் ஈரமாக இருந்த காரணத்தினால், வீரர்கள் டைப் செய்வதில் பெரிய பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக வீரர்கள் ஓடுவதில் கூட காயம் ஆபத்து காரணமாக மெதுவாகவே செயல்பட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில்தான் இந்த மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி வருகின்ற மார்ச் ஏழாம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ “இந்த ஆடுகளம் கடந்த மாதம் ரஞ்சி டிராபியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் ஆகும். நாங்கள் வந்து பார்த்த பொழுது, இங்குள்ள வானிலையைக் கருத்தில் கொள்ளும் பொழுது மைதான ஊழியர்கள் மிகவும் சிறப்பான வேலையை செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “இந்திய டெஸ்ட் டீம் கேப்டன் கனவு.. எனக்கு மட்டும் வித்தியாசமா நடந்தது” – அஸ்வின் பேட்டி

மைதான ஊழியர்கள் இந்த மைதானத்தின் அவுட் ஃபீல்டில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். முன்பிருந்ததை விட நன்றாக இருக்கிறது. உலக கிரிக்கெட் அழகான மைதானங்களில் தரம்சாலா மிக முக்கியமான ஒன்று எனக் கூறியிருக்கிறார்.