வீடியோ: என்னா கேட்ச்டா… ஜானி பேர்ஸ்டோவ் அசத்தல் கேட்ச்.. மிரண்டுபோய் நடையை கட்டிய ஆஸ்திரேலிய வீரர்!

0
3744

ஆஷஸ் 4ஆவது டெஸ்டில் மிட்ச்சல் மார்ஷ் அடித்த பந்தை அசாத்திய கேட்ச் எடுத்து அவுட்டாக்கினர் ஜானி பேர்ஸ்டோவ். இதன் விடியோவை கீழே காணலாம்.

ஆஷஸ் டெஸ்டின் நான்காவது போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு ஓபனிங் இறங்கிய வார்னர் 32 ரன்களுக்கு வோக்ஸ் பந்தில் அவுட்டானார். கவாஜா வெறும் 3 ரன்களுக்கு பிராட் பந்தில் வெளியேறினார்.

லபுச்சானே மற்றும் ஸ்மித் இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்தனர். ஸ்மித் துரதிஷ்டவசமாக 41 ரன்களுக்கு மார்க் வுட் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். அடுத்துவந்த டிராவிஸ் ஹெட் உடன் லபுச்சானே பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தது.

அரைசதம் அடித்திருந்த லபுச்சானே 51 ரன்களில் வெளியேறினார். அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கடந்த போட்டியில் சதமடித்து மிரட்டிய மிட்ச்சல் மார்ஷ், இந்த போட்டியிலும் தன்னுடைய ஃபார்மை தொடர்ந்தார். அரைசதம் அடித்திருந்த மார்ஷ், இங்கிலாந்து பவுலர் கிரிஸ் வோக்ஸ் பந்தில் அடிக்க முயற்சித்த போது பந்து கீப்பர் வசம் சென்றது.

இக்கட்டான இடத்தில் வந்த பந்தை அசாத்தியமாக பிடித்து மார்ஷ் விக்கெட்டை எடுக்க முக்கிய பங்காற்றினார் ஜானி பேர்ஸ்டோவ். இதன் விடியோவை கீழே காணலாம். மார்ஷ், 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸ் உட்பட 51 ரன்கள் அடித்து வெளியேறினார்.

கிரீன் 16 ரன்கள், அலெக்ஸ் கேரி 20 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 299 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்திருந்தது. களத்தில் ஸ்டார்க் (23 ரன்கள்), கம்மின்ஸ்(1 ரன்) இருவரும் நின்றிருக்கின்றனர்.

இங்கிலாந்து அணி சார்பில் கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள், பிராட் 2 விக்கெட்டுகள், மார்க் வுட் மற்றும் மொயின் அலி இருவரும் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

ஜானி பேட்ஸ்டோவ் எடுத்த மிரட்டலான கேட்ச் வீடியோ: