“நான் கேப்டனா இருந்தப்ப ஸ்டோக்ஸ கஷ்டப்படுத்திருக்கேன்.. ஆனா அவரு..” – ஜோ ரூட் வெளிப்படை பேச்சு

0
13238
Root

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்பொழுது இந்த தொடரில் நான்காவது போட்டி ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் அபாரமாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் குவித்தார். பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமான இந்த ஆடுகளத்தில், பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் முறையில் ஜோ ரூட் விளையாடி அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து 353 என்கின்ற நல்ல ரன்னை எட்டியது.

- Advertisement -

இந்தத் தொடரில் தொடர்ந்து ஜோ ரூட் அதிரடியான முறையில் விளையாட சென்று தனது விக்கெட்டை மிகச் சுலபமாக கொடுத்து வந்தார். இது இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் இருவரும் தங்களது திட்டங்களால் ஜோ ரூட் பேட்டிங் கெடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டி வந்தார்கள்.

இப்படியான நிலையில்தான் வழக்கம் போல் அவருடைய பாணியில் பேட்டிங் தொழில்நுட்பத்தை நம்பி விளையாடி அசத்தலான சதத்தை அடித்திருக்கிறார். இதன் காரணமாக பாஸ்பால் மீதான விமர்சனங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இன்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து மிகவும் பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இந்த போட்டியை இப்பொழுது தன் கைவசம் வைத்திருக்கிறது.

இந்த நிலையில் போட்டி குறித்து ஜோ ரூட் இன்று பேசும்பொழுது ” இந்த இரண்டு நாட்களாக இந்த போட்டியில் நாங்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இப்படி விளையாடுவதைதான் உண்மையாக நான் எப்பொழுதும் விரும்புகிறேன். ஆடுகளம் தொடர்ந்து மோசம் அடைந்து கொண்டே இருக்கும் என்று தெரிகிறது.

நான் நேர்மையாக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், நான் 96 ரன்களில் இருந்த பொழுது ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் அப்படி விளையாடுவது முடியாத காரியம்.

நான் என்னுடைய அணிக்கும் என்னுடைய அணி வீரர்களுக்காகவும் கொஞ்சம் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னால் அதை செய்ய முடிந்ததில் இப்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கேப்டனாக இருந்த பொழுது ஸ்டோக்சை பந்து வீச வைத்திருக்கிறேன். இப்பொழுது அவர் கேப்டனாக இருக்கும் பொழுது என்னை பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்கிறார்.

இரண்டு இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் இவ்வளவு நன்றாக விளையாடுவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நான் சோயப் பஷீர் அதிகம் பார்த்தது கிடையாது. அவர் ஒரு நல்ல கேரக்டர் மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து போய் விக்கெட் எடுப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.