நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் சுப்பன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும்? என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தை பொறுத்தவரையில் தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். எனவே வானம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விளையாட வேண்டியது மிகவும் அவசியம். ஒரே நாளில் மூன்று விதமான வானிலையையும் பார்க்க வேண்டியதாக இருக்கலாம்.
மூன்று விஷயங்கள் முக்கியம்
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது ” இங்கிலாந்தில் நீங்கள் விளையாடும் பொழுது மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஒன்று வானம் எப்படி இருக்கிறது? என்பது, இரண்டாவது காற்றின் தரம், மூன்றாவது ஆடுகளத்தின் தன்மை ஆகும். போட்டியில் ஷாட் விளையாடுவதற்கு கடினமான நேரம் இருக்கும். எனவே அந்த கட்டங்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்”
“நீங்கள் பந்துகளை விட்டு விளையாடுவது வெறும் தற்காப்பு மட்டுமே கிடையாது. சூரியன் வெளியே வரும்பொழுது நீங்கள் ரன்கள் எடுப்பதற்கு காத்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் நோக்கமாகவும் இருக்கும். நீங்கள் பொறுமையாக இருந்தால் இப்படியான சூழ்நிலை வரும் பொழுது ரன்கள் எடுக்க முடியும்”
ஆடுகளம் இப்படித்தான் இருக்கும்
“தற்போது லீட்ஸ் மைதானத்தில் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. எனவே இதற்கு தகுந்த ஆடுகளத்தையே கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த வகையில் பார்த்தால் ஆடுகளத்தில் புல் இருக்கும். எனவே ஆடுகளத்தில் முன்னால் வந்து விளையாட முடியாது. நீங்கள் இங்கிலாந்தில் எப்பொழுதும் சவாலை ஏற்றுக் கொண்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : கோலி, ரோகித் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு.. இருப்பினும் சக வீரர்களுக்கு வார்னிங் தந்த இங்கிலாந்து பவுலர் பிரைடன் கார்ஸ்
“உங்கள் நேரம் வரும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருந்து சவாலை மனதில் சுமக்க வேண்டும். நிலைமை சீராகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் சவால்கள் இருக்கும். இதை நல்ல அணியும் நல்ல வீரர்களும் கடந்து சென்று சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






