“என் ஆட்டம் எனக்குதான் தெரியும்.. இன்னும் தவறு செய்வேன்.. உங்க வேலைய பாருங்க” – ஜோ ரூட் அதிரடி பேச்சு

0
771
Root

இந்திய மண்ணில் இங்கிலாந்து பாஸ்பால் முறை சரி வராது என்று பல முன்னால் வீரர்கள் ஏற்கனவே தொடருக்கு முன்பாக கணித்திருந்தார்கள்.

ஆனாலும் கூட ஜோ ரூட் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியாக பாஸ் பால் முறையில் அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் ஜோ ரூட்டால் இந்திய மண்ணில் ஜொலிக்க முடியவில்லை.

- Advertisement -

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி ஒரு அரை சதம் கூட எடுக்காமல் இங்கிலாந்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார். இங்கிலாந்து அணி இந்த தொடரை இழந்ததில் ஜோ ரூட் பேட்டிங் அணுகுமுறை சரி இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பும்ரா பந்துவீச்சில் தவறான ஷார்ட் விளையாடி ஆட்டம் இழந்து, இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் ஜோ ரூட் அணுகுமுறையை விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இது குறித்து பேசி உள்ள ஜோ ரூட் “இந்தத் தொடரில் நான் எப்படி விளையாடினேன் எப்படி ஆட்டம் அடைந்தேன் என்பது குறித்து மக்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் எது சிறந்தது என்று நான் நினைக்கிறேன் அப்படித்தான் விளையாடுவேன். என்னுடைய ஆட்டம் என்னை தவிர வேறு யாருக்கும் நன்றாகத் தெரியாது.

- Advertisement -

நான் பேட்டிங்கில் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், நான் சிறப்பாக இருக்கவும், புதிய பரிணாமத்தில் விளையாடவும் முயற்சி செய்து கொண்டே இருந்ததால்தான். இது தொடர்ந்து நடக்க வேண்டும். நீங்கள் விளையாட்டில் ஒரே இடத்தில் தேங்கி விட்டால், உங்களது ஆட்டம் முறை மற்றும் பலவீனம் குறித்து எல்லாம் எதிரணியின் கைகளுக்கு சென்று விடும். நான் எப்பொழுதும் சரியாகவே இருக்க முடியாது. நான் நிச்சயம் தவறுகள் செய்வேன்.

நான் குறிப்பிட்ட ஷாட்டை ஆடி இருக்கத் தேவையில்லை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் நான் அதற்கு முன்பு இதே போல் விளையாடிய பொழுது என்ன செய்வது? அப்பொழுது யாரும் எதுவும் சொல்லவில்லையே.

அஸ்வின் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது ஆனால் அங்கு பும்ராவும் இருந்தார். அவர் நான்கு ஓவர்களுக்கும் மேல் சென்று வீசாமல் இருப்பதற்கு, அவரை தாக்கி விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒரு பந்துவீச்சாளரை குறைக்க முடியும். மேலும் இந்திய அணியின் மேல் அழுத்தத்தை உருவாக்க முடியும். இதற்காகத்தான் அவரது பந்துவீச்சை அடிக்கச் சென்றேன்.

இதையும் படிங்க : “ஐபிஎல் 2024.. இந்தமுறை இவங்க டீம் பிளே-ஆப் வரலனா அது பெரிய அவமானம்” – ஆகாஷ் சோப்ரா அதிரடி பேச்சு

எல்லாமே அந்தந்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கில் நான் எப்படி சிந்திக்கிறேன் என்பது குறித்து என்னுடைய செயல்முறையும் அமைகிறது. என்னுடைய ஆட்டம் பற்றி எனக்குத்தான் நன்றாக தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.