“ஐபிஎல் 2024.. இந்தமுறை இவங்க டீம் பிளே-ஆப் வரலனா அது பெரிய அவமானம்” – ஆகாஷ் சோப்ரா அதிரடி பேச்சு

0
122
IPL

17ஆவது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஏறக்குறைய அனைத்து அணிகளுமே தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி இருக்கின்றன.

இதன் காரணமாக நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் மிகவும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய இடத்தில் இருக்கின்றன.

- Advertisement -

இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய அணியாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் வந்திருப்பதும், பும்ரா மீண்டும் திரும்பி இருப்பதும், மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனை அமைப்பதில் பெரிய வசதியையும் பலத்தையும் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் இன்னொரு புறம் சத்தம் இல்லாமல் பலமான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது. அந்த அணி தேவ்தத் படிக்கல்லை லக்னோ அணிக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து வேகபந்துவீச்சாளர் ஆவேஷ் கானை வாங்கி இருக்கிறது.

மேலும் கடந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய துருவ் ஜுரல் தற்போது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை அமைப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போலவே வசதியையும் பலத்தையும் கொடுத்திருக்கிறது. மேலும் இந்த அணியிடம் ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல் மற்றும் ஆட்டம் ஜாம்பா என உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சு கூட்டணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த அணி குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது “ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு நல்ல அணி இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதனால்தான் இது ஒரு போட்டி நிறைந்த ஐபிஎல் தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த முறையும் இந்த அணி பிளே ஆப் சுற்று தகுதி பெறவில்லை என்றால் அது அவமானம்.

அந்த அணியில் ஜோஸ் பட்லர் ஜெய்ஸ்வால் என ஆரம்பித்து, திறமையான இந்திய வீரர்களும், திறமையான வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். எல்லா வெளிநாட்டு பிளேயர்களும் விளையாட முடியாது என்றாலும் கூட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறந்த அணியாக இருக்கிறது.

இதையும் படிங்க : “சனத் ஜெயசூர்யாகிட்ட விராட் கோலி செஞ்ச அந்த சம்பவம்.. மிரண்டு போயிட்டேன்” – ஹர்பஜன் சிங் பேச்சு

கடந்த முறை அவர்கள் இம்பேக்ட் பிளேயரை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்கள். இந்த முறையும் அவர்கள் இம்பேக்ட் பிளேயரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.