டி20 உலககோப்பைக்கு.. நம்ம கேப்டன் இவர்தான்.. போகிற போக்கில் உண்மையை உடைத்த ஜெய்ஷா

0
400
Rohit

இந்தியாவில் மே மாதம் இறுதியில் ஐபிஎல் 17வது சீசன் முடிவடைய, அடுத்து ஜூன் மாதம் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

பிசிசிஐ இந்த முறை ஐபிஎல் தொடர் முடிந்து பெரிய தொடர்களில் பங்கேற்பது குறித்து மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடர் முடிந்து ஓய்வே இல்லாமல் இங்கிலாந்து சென்று விளையாடி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தோற்றது.

- Advertisement -

இந்த நிலையில் பிசிசிஐ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இருக்கக்கூடிய, இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள், மிக விரைவாக நியூயார்க் செல்ல வேண்டும் என கூறியிருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய டி20 அணிக்கு 14 மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் தொடருக்கு திரும்பி இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொருத்துதான் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்கின்ற கேள்வியும் இருந்து வந்தது.

ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே, டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இருந்தது. இதில் எல்லா போட்டிகளையும் இந்திய அணி விளையாடிய முடித்துவிட்டது.

- Advertisement -

எனவே இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு ஐபிஎல் தொடர் மட்டும்தான் தற்பொழுது கைவசம் இருக்கிறது. ஆகையால் ஐபிஎல் தொடரில் செயல்படுவதை பொறுத்தே, டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்படும் என கூறப்பட்டது. இதனால் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக டி20 உலக கோப்பையில் தொடர்வாரா? என்கின்ற சந்தேகம் இருந்து வருகிறது.

தற்பொழுது இதற்கு போகிற போக்கில் பதில் அளிக்கும் விதமாக பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறும் பொழுது ” 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் முதல் 10 போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றிருந்தோம்.

இதையும் படிங்க : “என்ன பெரிய வேலை செஞ்சிட்டிங்க.. முட்டாள்தனமா பேசாதிங்க.. போய் விளையாடுங்க” – இந்திய அணிக்கு கவாஸ்கர் அறிவுரை

வெஸ்ட் இண்டீஸ் பார்படாசில் இந்திய டி20 அணி ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்பது உறுதியாகி இருக்கிறது.