“என்ன பெரிய வேலை செஞ்சிட்டிங்க.. முட்டாள்தனமா பேசாதிங்க.. போய் விளையாடுங்க” – இந்திய அணிக்கு கவாஸ்கர் அறிவுரை

0
916
Bumrah

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜெஸபிரித் பும்ரா இருக்கிறார். மேலும் அவருடைய பணிச்சுமை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று, அவரை இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க கூடாது என்றும் வெளியில் இருந்து கூறப்பட்டது.

பொதுவாக ஆசியா தாண்டி விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பும்ரா பங்கேற்பது சரியாக இருக்கும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்தார்கள். இதற்கு காரணமாக அவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கூறினார்கள்.

- Advertisement -

இதற்கேற்றபடியே உம்ராவுக்கு ஸ்ட்ரெஸ் பிராக்சர் முதுகில் உருவாகி, கடைசியாக அறுவை சிகிச்சை செய்துதான் உலகக்கோப்பைக்கு திரும்பினார். இதற்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, அடுத்து ஐபிஎல் தொடரிலும் விளையாடி, உடனே டி20 உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டும். எனவே பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்டில் ஓய்வு தரப்படலாம் என்று கூறப்பட்டது.

தற்போது ஆடுகளங்கள் முன்பு போல் சுழல் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் பும்ராதான் பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியவராக இருக்கிறார்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “தற்பொழுது இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே மொத்தம் ஒன்பது நாட்கள் இடைவெளி இருக்கிறது. இந்த அளவு ஓய்வு என்பது பும்ராவை விட இரண்டு மடங்கு ஓவர்கள் அதிகமாக வீசிய பந்துவீச்சாளருக்கும் போதுமானது.

- Advertisement -

எனவே பணிச்சுமை என்கின்ற வார்த்தையை பயன்படுத்துவது முட்டாள்தனமானது. பும்ரா இப்பொழுது வரை சராசரியாக ஒரு இன்னிங்ஸ்க்கு 15 ஓவர்கள் வீசியிருக்கிறார். இதை யாருமே அதிகமான பந்துவீச்சு என கூற மாட்டார்கள்.

மூன்றாவது போட்டிக்கு பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு ஓய்வு தரப்படும் என்று சில செய்திகள் பார்த்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய அழிவுகரமான பந்து வீச்சால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மனதில் அச்சத்தை விதைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 35 ஓவர்கள்.. 2 வீரர்கள் இல்லாமல் விளையாடி ஆப்கான் வொயிட் வாஷ்.. இலங்கை பதும் நிசாங்கா அதிரடி

பும்ரா தன்னுடைய நாட்டு அணிக்காக விளையாடுகிறார். எவ்வளவு வேலை செய்ய வேண்டுமோ அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் நாட்டுக்கு விளையாடுவது பாக்கியம். அதனால் இங்கு கிரிக்கெட்டை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது” எனக் கூறியிருக்கிறார்.