வாய்ப்பில்ல ராஜா! உலக கோப்பையை வெல்ல அந்த வீரர் கண்டிப்பாக தேவை.. ரோகித்துக்கு இலங்கை வீரர் அறிவுரை

0
1038

2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி வென்றது. ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறும் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் ஷர்மாவுக்கு இலங்கை வீரர் பெர்னாண்டோ அறிவுரை வழங்கியுள்ளார். அதில் பும்ரா ஒரு மகத்தான வீரர். இந்திய அணி கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற வெற்றி நீங்கள் எடுத்துப் பார்த்தாலே அதில் பும்ராவில் பங்களிப்பு எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியும்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை அவர்தான் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார். ஆட்டத்தை தனியாக மாற்றக்கூடிய வீரர். பும்ராவுக்கு என்ன காயம் ஏற்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. ஆனால் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பும்ரா கண்டிப்பாக விளையாட வேண்டும். ஏனென்றால் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பும்ரா தான் முக்கியமான வீரராக இருப்பார்.

இந்தியா ஆடுகளங்களில் பும்ரா எப்போதும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கெட்ட கனவுகளை தனது பந்துவீச்சு மூலம் கொடுக்கக்கூடியவர் தான் பும்ரா. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே உள்ளது. இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்ல முதல் தகுதியான நபர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

பும்ராவும் ரோகித்தும் ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு வைத்திருப்பார்கள். இதனால் பும்ரா கண்டிப்பாக விளையாட வேண்டும் என ரோகித் சர்மா நினைப்பார். இந்திய அணிக்கு மட்டுமல்ல ரோகித் சர்மாவுக்கும் பும்ரா வலது கையாக  இருப்பார். உலகக் கோப்பையை பும்ரா இல்லாமல் இந்திய அணி வெல்ல சுத்தமாக வாய்ப்பே கிடையாது. இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும், 30 டெஸ்ட் போட்டிகளில் 128 விக்கெட்களிலும் 70 டி20 போட்டிகளில் 60 விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தி இருக்கிறார்.