மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு உண்மையா.. ஹர்திக்குக்கு அணியில் ஆதரவு இருந்ததா? – பும்ரா பதில்

0
259
Bumrah

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்புக்கு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய எதிர்ப்பு சொந்த அணி ரசிகர்களிடம் இருந்தது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு எப்படி இருந்தது என்று அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. அதே சமயத்தில் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மா இடத்திற்கு ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டது அந்த அணி ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை உண்டாக்கியிருந்தது. இதனால் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினார்கள்.

- Advertisement -

இன்னொரு புறம் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக பிரிந்து இருக்கிறது என்று பேசப்பட்டது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் சில குறிப்பிட்ட சமூக வலைதள பதிவுகள் ஹர்திக் பாண்டியாவும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு எதிரானது என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் அப்படியான சூழலில் அணிக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியிருக்கிறார். மேலும் மீண்டும் ஹர்திக் பாண்டியாவுக்கு எப்படி ஆதரவு மும்பையில் திரும்பியது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்த இப்படியான விஷயங்களை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இங்குதான் நாங்கள் ஒரு அணியாக வருகிறோம். நாங்கள் இப்படியான விஷயங்களை எப்போதும் ஊக்குவிப்பது கிடையாது.

நாங்கள் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா உடன் இருந்தோம். அவருக்கு ஆதரவு தேவைப்படும்போதெல்லாம் நாங்கள் அவருடன் பேசினோம். சில விஷயங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அப்படியான விஷயங்கள் நடந்தால் நடக்கும். அதை நம்மால் தடுக்க முடியாது.

இதையும் படிங்க : 18 ஓவர்.. மீண்டும் டிராவிட் மகன் ஏமாற்றம்.. தொடர்ந்து காப்பாற்றும் கர்நாடக ஹர்திக் பாண்டியா.. மகாராஜா டி20 2024

ஆனால் நாங்கள் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு உருவாகியிருந்த மொத்த கதையும் இந்த விஷயத்தில் மாறியது. இது எங்களுடைய பயணத்தின் ஒரு பகுதி. நாங்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எங்களால் முடிந்த ஆதரவை வழங்க எப்பொழுதும் முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -