மகன் வந்த பிறகு தான் பும்ரா மாறினார்..  மனைவி சஞ்சனா வெளியிட்ட உருக்கமான கருத்து

0
191

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றார். உலக கிரிக்கெட்டின் முன்னணி பவுலராக விளங்கும் பும்ரா, ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன் ஆகவும் செயல்பட்டார்.

பும்ரா எந்த அணிக்காக விளையாடுகிறாரோ, அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்படும். அந்த அளவுக்கு அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார். இந்த நிலையில் அவருடைய மனைவி சஞ்சனா பேசியுள்ளது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

- Advertisement -

குழந்தையால் மாறிய பும்ரா:

அதில், தமது குழந்தை பெற்ற நிகழ்வு குறித்து சஞ்சனா உருக்கமாக பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “நாங்கள் மருத்துவமனையில் இருவரும் குழந்தையை ஒன்றாக வாங்கிய நிகழ்வு மறக்க முடியாதது. எனக்கு பிரசவம் வந்த சமயத்தில் பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.”

“எனக்காக அவர் நாடு திரும்பினார். நான் பும்ரா என்னுடன் இருக்க விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகன் அங்காட் வந்த பிறகு தான் பும்ரா ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் ஆகவே மாறி வருகின்றார் என்று நான் நினைக்கின்றேன். நாம் கணவருக்கு சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.”

- Advertisement -

வீரர்களின் மனைவி எப்படி இருப்பாங்க?:

“அப்போதுதான் அவர்களால் அமைதியாக வாழ முடியும். பும்ரா வீடு திரும்பியதும், ஒரு நல்ல கணவனாகவும் நல்ல தந்தையாகவும் மாறிவிடுவார். இது நிச்சயம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும்.
ஒவ்வொரு வீரரும் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்.”

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த Fab 4 யார்? 2 இந்திய வீரர்களை குறிப்பிட்ட வில்லியம்சன்.. விவரம்

“களத்தில் நீங்கள் பார்ப்பது போல் கிடையாது. களத்திற்கு வெளியே வேறு மாதிரி இருப்பார்கள். எனவே ஒவ்வொரு வீரர்களுக்கும் ஏற்ற வகையில் தான் அவருடைய மனைவிகள் அமைவார்கள். நான் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருவதால் வீரர்களையும் பேட்டி எடுப்பேன். அதன் பிறகு அவருடைய மனைவிகள் குறித்தும் எனக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களிடம் என்ன மிஸ் ஆகிறது? அதனால்தான் இவர்களுடைய மனைவி இவருக்கு கிடைத்திருக்கிறார்” என்று பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார்.

- Advertisement -