சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த Fab 4 யார்? 2 இந்திய வீரர்களை குறிப்பிட்ட வில்லியம்சன்.. விவரம்

0
319

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அணியிலும் ஒரு வீரர்கள் சிறந்து விளங்குவார்கள். சச்சின்,ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, காலிஸ் போன்ற வீரர்கள் ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்சி செய்து வந்தனர்.

அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உலக கிரிக்கெட்டை விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்மித் ஆகிய நான்கு வீரர்களும் ஆட்சி செய்து வந்தனர். இதனால் இந்த நான்கு வீரர்களையும் குறிக்கும் வகையில் fab four என்று ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் அழைப்பார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒரு ஆண்டாக விளையாடவில்லை. ஜோ ரூட்டும் டி20 போட்டிகளில் பங்கேற்காத நிலையில், ஸ்மித்தும்  தனது கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதி பக்கத்தில் இருக்கின்றார். இதனால் அடுத்த தலைமுறையின் fab four யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வில்லியம்சன் பாராட்டு:

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன், “தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் என்று கேட்டால் என் மனதிற்கு ஜெய்ஷ்வால் ,கில், ரச்சன் ரவீந்திரா மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள்”

“இந்த நான்கு வீரர்களும்அடுத்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக எனக்குத் தோன்றுகிறார்கள். ஐந்தாவதாக ஒரு வீரரை சேர்க்க வேண்டும் என்றால் நான் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை சேர்ப்பேன். அந்த ஐந்து வீரர்களுமே அபாரமாக விளையாடி வருகிறார்கள்.”

சிறந்த 4 வீரர்கள் யார்?:

“இந்த வீரர்களின் கிரிக்கெட் திறன் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது” என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அதேபோன்று முன்னாள் இங்கிலாந்து அணியின் நாசர் உசைன் அடுத்த fab four வீரர்கள் குறித்து பேசும் போது, ஜெய்ஸ்வால், ஹாரி புரூக் மற்றும ரச்சின் ரவீந்தராவை குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் சேர்க்கவில்லை.. இன்னும் என்ன செய்யனும்? -கங்குலி கேள்வி

மேலும்  ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தான் வீரர் சையிம் அயூப்பை அவர் பாராட்டி இருந்தார். இதேபோன்று மைக்கேல் ஆத்தர்ட்டன், fab four குறித்து பேசும்போது இலங்கை வீரர் கமிண்டு மெண்டீஸ்,ரச்சின் ரவீந்திரா, ஜெய்ஸ்வால், ஹரி புரூக் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -