இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகல் – மாற்று வீரருக்கான தேடலில் குஜராத் அணி

0
757
Jason Roy Gujarat Titans

இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஓபனிங் வீரர் ஜேசன் ராய் அவ்வளவாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இல்லை. இதுவரை மொத்தமாகவே அவர் 13 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அந்த 13 போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தமாக 329 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.90 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.01 ஆகும்.

2017ஆம் ஆண்டு குஜராத் அணியிலும் 2018ஆம் ஆண்டில் டெல்லி அணியிலும் 2021ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியிலும் இதுவரை அவர் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை குஜராத் அணி 2 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் கொவ்ட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் உட்பட மொத்தமாக 303 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் இவருடைய ஆவெரேஜ் 50.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 170.22 ஆக இருந்தது. கூடுதலாக நடந்து முடிந்த இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மிகவும் மதிப்புமிக்க இரண்டாவது வீரராக அவர் கருதப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ஜேசன் ராய்

நல்ல பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடுபவர் என்கிற நம்பிக்கையில் அவரை குஜராத் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தது. ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 26ம் தேதி துவங்கி மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெறப் போகிறது. பின்னர் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாதில் நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

எனவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் பயோ பபுளில் தங்க வேண்டும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டுகளைப் போல அனைத்து வீரர்களும் பயோ பபுளில் தங்க வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விடுத்து இருந்தது. குஜராத் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராய் தற்பொழுது பயோ பபுளில் அதனால் அவ்வளவு காலம் தங்க முடியாது என்று கூறி ஐபிஎல் தொடரை புறக்கணித்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

ஜேசன் ராய் மற்றும் எல்லி மூர் தம்பதிக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இறந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு மாத காலம் ஐபிஎல் தொடரில் பயோ பபுளில் தங்கியிருந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத ஒரே காரணத்தினால் மட்டுமே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஜேசன் ராய் தற்பொழுது பங்கேற்க முடியாத காரணத்தினால் அவருக்கு ஏற்ற மாற்று வீரரை குஜராத் அணி நிர்வாகம் கூடிய விரைவில் தேர்வு செய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.