இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் ஓய்வு? கடைசி டெஸ்ட் குறித்து பேச்சு

0
2406

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஓய்வு பெறுவது குறித்து தற்போது பேசி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டிலே அதிக விக்கெட்டுகளை டெஸ்டில் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆண்டரசன் படைத்திருக்கிறார்.

40 வயதான இவர் 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் ஆசஸ் டெஸ்டில் ஆண்டர்சன் இதுவரை மோசமாகவே செயல்பட்டு இருக்கிறார். விளையாடிய மூன்று டெஸ்டிலும் ஆண்டர்சன் மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் லீட்சில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆண்டர்சன் நீக்கப்பட்டார். வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டர்சன், கிரிக்கெட் வீரருக்கு சில சரிவு காலம் வரும்.ஆனால் அந்த சரிவு இது போன்ற பாரம்பரியமிக்க பெரிய தொடர்களில் வருவதை யாருமே விரும்ப மாட்டார்கள். இதுவே ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் இவ்வாறு செயல்பட்டிருந்தால், அணியில் என்னை வைத்திருக்கலாமா வேண்டாமா என்று விவாதம் இருந்திருக்கும்.

ஆனால் தற்போது எனக்கு வயதாகி விட்டதால் நான் இனி நான் கிரிக்கெட் விளையாடனுமா இல்லை ஓய்வு பெறனுமா என்ற விவாதம் இருக்கிறது. இந்தத் தொடரின் கடைசி போட்டி என்பதால் நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று ரசிகர்களாகிய நீங்களும் நினைக்கலாம்.

- Advertisement -

ஆனால் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கிறது.கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்வேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. அந்த தீ குறையும் போது தான் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன். அதுவரை நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருப்பேன்.

எனவே நான் ஓய்வு குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை. அணியில் இருப்பதை என்னுடைய பயிற்சியாளர்கள் சக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இங்கிலாந்து அணி வீரராக வலம் வருவதில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது தான் நான் சந்தோஷத்துடன் அனுபவித்து வருகிறேன்.

என்னுடைய பார்மை மீட்க நான் தொடர்ந்து பயிற்சி செய்வேன். கடைசி டெஸ்டில் எனக்கு இடம் கிடைத்தால் வெற்றிக்காக கூடுதலாக உழைப்பேன் என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார்.இப்போது உங்களுக்கு அந்த கவர் போட்டோவில் என் ஆண்டர்சன் வயதான தோற்றத்தில் இருப்பது போல் பதிவிடப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருக்கும். அந்த போட்டோவில் இருப்பது போல் ஆண்டர்சன் மாறினாலும் அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டுதான் இருப்பார்.