24.75 கோடி எதுவும் பண்ணாது.. கேகேஆர் எக்ஸ்-பேக்டர் இவர்தான் – புது மென்டர் கம்பீர் பேச்சு

0
103
Gambhir

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்து, ஐபிஎல் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டு முறையும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை பெற்று தந்தவர் கௌதம் கம்பீர்தான்.

ஐபிஎல் தொடருக்கு புதிய அணியாக உள்ளே வந்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மென்டராக கௌதம் கம்பீர் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த அணியின் பொறுப்பை விட்டு விலகிய அவர், மீண்டும் தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக வந்திருக்கிறார். இந்த அணிக்கு தற்பொழுது தலைமை பயிற்சியாளராக உள்நாட்டு பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் இருக்கிறார். கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்கிறார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு இந்திய பேட்ஸ்மேன் பிளேயிங் லெவனில் குறைவாக இருந்தார். இதன் காரணமாக அவர்கள் இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை டாப் ஆர்டரில் பிளேயிங் லெவனில் வைக்க வேண்டி இருந்ததால், ஒரு வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளரை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினாலும், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்கை ஐபிஎல் ஏல வரலாற்றில் மிக அதிக தொகை கொடுத்து 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க காரணத்தினாலும், அந்த அணிக்கு இருந்த எல்லா பலவீனங்களும் மறைந்து இருப்பதாக தெரிகிறது.

மேலும் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிகளின் போது ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானதாக மெதுவான ஆடுகளமாக இருந்தது. மீண்டும் பழைய மாதிரி ஆடுகளம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. எனவே அவர்களிடம் இருக்கும் தரமான ஸ்பின்னர்கள் மூலம், இந்திய பேட்டிங் யூனிட் மூலம், நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் புதிய மெண்டராக வந்திருக்கும் கௌதம் கம்பீர் பேசும் பொழுது ” மிட்சல் ஸ்டார்க் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த விலை அவருக்கு அழுத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் என்ன செய்து வருகிறாரோ, அதையே அவரால் கேகேஆர் அணிக்கும் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு எக்ஸ்பேக்டராக இருப்பார்.

இதையும் படிங்க : வீல் சேர்ல இருந்தா கூட தோனி சிஎஸ்கேவுக்கு விளையாடுவார்.. அவர் பிரச்சனையே வேற – ராபின் உத்தப்பா பேச்சு

எனக்கு கேகேஆர் என்பது ஒரு பிரான்சிஸைஸ் டீம் கிடையாது. இந்த அணி என்னுடைய எமோஷனல் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று தெரியும். அதை நிறைவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.