“ஆண்டர்சனையும் இதையும் விடமாட்டேன் ஸார்” – கும்ப்ளேவுக்கு 2 வாக்குறுதி தந்த ஜெய்ஸ்வால்

0
706
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கப்படுவதற்கு சில, இந்தியன் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் பற்றி கூறும் பொழுது, இங்கிலாந்து தொடர் முடியும் போது ஜெய்ஸ்வால் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக மாறி இருப்பார் என்று கூறி இருந்தார்.

அவர் கூறியது போலவே இங்கிலாந்துடன் இன்னும் முடிவடைவதற்குள்ளாகவே ஜெய்ஸ்வால் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக தற்பொழுது மாறியிருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக 80+ ரன்கள் குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் கொஞ்சம் தவற விட்டார். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியும் அடைந்தது.

இதற்குப் பின்னால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திரும்ப வந்த அவர் அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து கொடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சின் மீது மட்டும் தாக்கி விளையாடாமல், மற்ற எல்லோர் பந்துவீச்சையும் அடித்து நொறுக்கி இரட்டை சதம் அடித்தார்.

இதற்கு அடுத்து மீண்டும் மூன்றாவது டெஸ்டில் திரும்ப வந்து முதல் டெஸ்டில் விட்டு வைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனையும் விடாமல் அடித்து, தற்பொழுது இரண்டாவது இரட்டை சதத்தையும் எடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வறுமை பின்னணியில் இருந்து வந்த ஜெய்ஸ்வால் இயல்பாகவே போராட்ட குணம் கொண்டவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். போட்டிக்கு பின் இந்திய லெஜெண்ட் கும்ப்ளே உடன் நடந்த உரையாடலில் அவர் மிகவும் சிறப்பாக பேசியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “இந்தியாவில் நீங்கள் பேருந்து ரயில் மற்றும் ஆட்டோ என ஏறுவதற்கு கூட மிகவும் கடினப்பட வேண்டும். எனக்கு சிறுவயதில் இருந்தே கடினப்படுவது பழக்கமான ஒன்று. இதுவே எனக்கு கடினமான மனப்பான்மையைப் பெறுவதற்கு உதவியாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : “என் ஊர் மைதானம்.. இங்க இத செஞ்சா மட்டும்தான் ஜெயிக்க முடியும்” – ராஜ்கோட் ராஜா ஜடேஜா பேட்டி

நிச்சயம் அடுத்த முறையும் ஆண்டர்சன் பந்துவீச்சில் அங்கு இருந்தால் நான் கட்டாயம் அடிப்பேன். அதேபோல் கும்ப்ளே ஸார் கேட்டுக்கொண்டபடி நான் லெக் ஸ்பின் பந்துவீச்சை கைவிட மாட்டேன். தொடர்ந்து நான் பயிற்சி செய்வேன்” என்று கூறியிருக்கிறார். அனில் கும்ப்ளே பேட்டியின் போது இந்த கோரிக்கையை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.