இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து 150 ரன்கள் தாண்டி பெரிய வீரர்களின் சாதனைகளை முறியடித்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஜெய்ஸ்வால் அபார ஆட்டம்
இதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் சாய் சுதர்சன் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 306 பந்துகளில் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் தாண்டி 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தை தவற விட்டு ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் தன்னுடைய ஆறாவது டெஸ்ட் சதத்தையும் ஒட்டுமொத்தமாக ஏழாவது சதத்தையும் அடித்தார். இன்று முதல் நாள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருக்கிறது. ஜெயஸ்வால் ஆட்டம் இழக்காமல் 253 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் குவித்து இருக்கிறார். இவருடன் கில் 68 பந்தில் 20 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.
ஜெய்ஸ்வால் சாதனை
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 150 ரன்கள் தாண்டி எடுத்ததின் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்கள் தாண்டி அதிக முறை எடுத்த இந்திய வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் கம்பீரை தாண்டி இருக்கிறார். இத்துடன் 23 வயதில் அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்கள் தாண்டி எடுத்ததில் சச்சின் சாதனையையும் உடைத்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக 150 ரன்கள் எடுத்தவர்கள்:
20- சச்சின் டெண்டுல்கர்
14 – வீரேந்தர் சேவாக்
12- சுனில் கவாஸ்கர்
11- ராகுல் டிராவிட்
11-விராட் கோலி
7- அசாருதீன்
7- புஜாரா
6- லக்ஷ்மண்
6- வெங்கசர்கார்
5- யஷஸ்வி ஜெய்ஸ்வால்*
4 – ரோஹித் சர்மா
4- கௌதம் கம்பீர்
4 – முரளி விஜய்
இதையும் படிங்க : என்னுடைய குருவே இவர் தான்.. டி20, டெஸ்டில் சாதிப்பது குறித்து குல்தீப் யாதவ் கருத்து
23 வயதில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்கள் எடுத்தவர்.
8- டான் பிராட்மேன்
5- யஷஸ்வி ஜெய்ஸ்வால்*
4- சச்சின் டெண்டுல்கர்
4- ஜாவேத் மியான்தத்
4- கிரேம் ஸ்மித்






