என்னுடைய குருவே இவர் தான்.. டி20, டெஸ்டில் சாதிப்பது குறித்து குல்தீப் யாதவ் கருத்து

0
105

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டி தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தனது சக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை தனது குரு என புகழ்ந்தார்.

அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்த  ஜோடி மேற்கிந்திய தீவுகளை மொத்தமாக எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. ஜடேஜா தனது நான்கு விக்கெட்டுகளுடன் சிறப்பான சதமும் அடித்து, இந்தியாவின் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து  ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

குல்தீப், சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை 2025-ல் 17 விக்கெட்டுகளுடன் முன்னணி பந்துவீச்சாளராக விளங்கினார்.

என்னுடைய குரு:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்திற்கு முன், தனது பந்துவீச்சு ஃபார்ம் குறித்து குல்தீப் கூறியதாவது,  “சரியான நீளத்தில் பந்து வீசுவது மிகவும் முக்கியம், மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். இங்கு ஜடேஜா இருக்கிறார்,.அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து எனது குரு.”

- Advertisement -

“ஆசிய கோப்பையில் மற்றும் இங்கு நான் மிகவும் நிலையான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறேன். சரியான நீளத்தில் பந்து வீசுகிறேன். நீங்கள் சரியான நீளத்தில் தொடர்ந்து பந்து வீசும்போது, நீங்கள் நன்றாக பந்து வீசுவதாக உணர்கிறீர்கள். நாங்கள் ஜடேஜாவுடன் கிரிக்கெட் தொடர்பாக எதையும் பேசுவதில்ல.ஆனால் அவருடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று குல்தீப் தெரிவித்தார்.

பயிற்சி செய்கிறேன்:

இதை தொடர்ந்து பேசிய குல்தீப் யாதவ், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சில் உள்ள முக்கிய வித்தியாசத்தைப் பற்றி, குறிப்பாக பந்தின் பாதையைப் பற்றி விளக்கினார்.  “சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுவது டி20 வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நான் இங்கிலாந்தில் போதுமான அளவு பயிற்சி செய்தேன். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.”

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்ட்.. தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை தவறவிட்டார்.. கவாஸ்கர் ஆறுதல்

“பயிற்சி அளவில், நான் மிகச் சிறப்பாக இருந்தேன். டி20 வடிவத்தில், பந்தின் பாதையை மாற்ற வேண்டும், மிகவும் மென்மையாக பந்து வீச முடியாது. ஆனால் டெஸ்டில், பந்தை மேலே எறிந்து, பேட்ஸ்மேனை டிரைவ் செய்ய வைக்க வேண்டும்,” என்று குல்தீப் யாதவ் கூறினார்.30 வயதான இவர், இரு வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். குல்தீப் 14 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்டுகளை 21.48 சராசரியுடனும், 47 டி20 போட்டிகளில் 86 விக்கெட்டுகளை 13.12 சராசரியுடனும், 6.70 என்ற எகானமியுடனும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -