“நானும் ஜெய்ஸ்வாலும் ஒரு பிளான் பண்ணோம்.. அவர் வேற மாதிரி பிளேயர்” – ரஜத் பட்டிதார் பாராட்டு

0
384
Rajat

இன்று இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் அறிமுகம் செய்யப்பட்டார்.

இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை நான்காவது விக்கெட்டாக 179 ரன்களுக்கு இழந்தது. இதனால் அந்த இடத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி உண்டானது.

- Advertisement -

இதற்கு அடுத்து அறிமுகவீரர் ரஜத் பட்டிதார் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து விளையாடுவதற்கு தன்னுடைய அறிமுக போட்டியில் இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்தார்.

ஆனாலும் மிகச் சிறப்பாக விளையாடி ஜெய்ஸ்வால்வுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். துரதிஷ்டவசமாக அவர் 32 ரன்கள் எடுத்திருந்த பொழுது பந்து பேட்டில் பட்டு அவரால் தடுக்க முடியாத சூழலில் ஸ்டெம்பில் பட்டு ஆட்டம் இழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவுக்கு பின்னால், இந்திய அணிக்காக அறிமுகமாவது எப்படி இருந்தது? களத்தில் ஜெய்ஸ்வாலுடன் என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகள் சென்றது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரஜத் பட்டிதார் பேசும் பொழுது “நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கனவு நனவாகும் தருணம். நான் முதன் முதலில் விளையாட செல்லும் பொழுது எனக்கு எந்த பதட்டமும் கிடையாது. கிரிக்கெட்டில் நிறைய போட்டிகள் விளையாடி இருப்பதால் எந்த அழுத்தமும் இல்லை. நான் இயல்பாக எப்பவும் போல சாதாரணமாகவே இருந்தேன்.

நான் இந்திய ஏ அணிக்காக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். தற்பொழுது இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தது நம்பிக்கையை அதிகரித்தது.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் 179 ரன் அடிச்சிருக்கலாம்.. ஆனா முதல் நாளை ஜெயிச்சது நாங்கதான்” – பீட்டர்சன் பேச்சு

நானும் ஜெய்ஸ்வாலும் முடிந்தவரை ஆட்டத்தை எடுத்துச் செல்வது பற்றி பேசி வைத்திருந்தோம். எனது இன்னிங்ஸ் மிக நன்றாக இருந்தது. ஆனால் நான் அதை பெரிதாக்கி இருக்க வேண்டும். ஜெய்ஸ்வால் பற்றி பேசுவது என்றால், அவர் சிறந்த வீரர். குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடும் தனித்தன்மை கொண்ட வீரர். விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.