“ஜெய்ஸ்வால் 179 ரன் அடிச்சிருக்கலாம்.. ஆனா முதல் நாளை ஜெயிச்சது நாங்கதான்” – பீட்டர்சன் பேச்சு

0
364
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்கிறது.

மேலும் இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 179 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். இவருக்கு துணையாக அஸ்வின் இருக்க, இதற்கு அடுத்து கீழே பேட்டிங் செய்யக்கூடிய அளவில் குல்தீப் யாதவ் மட்டுமே இருக்கிறார். இவர் ஓரளவுக்கு ஒத்துழைப்பு தரலாம்.

- Advertisement -

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாகப்பட்டினம் ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. நல்ல பவுன்ஸ் இருக்கிறது ஆனால் பெரிய அளவில் பந்து திரும்பவில்லை.

மேலும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை பெரிய அனுபவ சுழற் பந்துவீச்சு கூட்டணி கிடையாது. பந்து வீசக்கூடிய நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுமே பெரிய அனுபவமும் வெற்றியும் இல்லாதவர்கள்தான்.

இப்படியான இங்கிலாந்து பந்து வீச்சு தாக்குதலை சமாளித்து ரன் சேர்க்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை வீணடித்து தவறான ஷாட் விளையாடி வெளியேறியிருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் ரன் அடித்திருந்தாலுமே, முதல் நாள் இங்கிலாந்து ஆனது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கூறுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து பீட்டர்சன் பேசும் பொழுது “இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும் பொழுது நிச்சயமாக பாசிட்டிவாக அதிரடியாகத்தான் விளையாடுவார்கள். இன்று இந்தியா பேட்டிங் செய்த விதத்தில் அவர்கள் விளையாடப் போவது கிடையாது. எனவே இது இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

ஆடுகளத்தில் பெரிதான எதுவும் இல்லை. பந்து மிக மோசமாக திரும்பவும் இல்லை. பவுன்ஸ் கூட சரியான அளவில்தான் இருந்தது. இப்படியான நிலையில் இந்தியா மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இந்திய ஏ அணி பதிலடி.. சாய் சுதர்சன் ஆர்சிபி பவுலர் அசத்தல் பர்பாமென்ஸ்

ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரன்கள் சேகரிக்க வேறு ஏதாவது பேட்ஸ்மேன் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அஸ்வின்தான் இருக்கிறார். எனவே ஜெய்ப்பால் ரன் அடித்து இருந்தாலும் கூட முதல்நாள் இங்கிலாந்து கைப்பற்றி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.