“எனக்கு ரெண்டே ஐடியா தான்.. அவர் செய்யறத மட்டும் பார்க்க ஆச்சரியமா இருக்கு” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
536
Jaiswal

இந்திய அணிக்கு நீண்ட வருடங்கள் கழித்து துவக்க இடத்தில் நம்பிக்கை அளிக்கும் விதமான இடதுகை ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் கிடைத்திருக்கிறார்.

அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால், அந்தப் போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

- Advertisement -

ஆனால் அதற்கு நிகரான மதிப்போடு, அவருடைய இந்திய மண்ணிலான சர்வதேச முதல் சதமே இரட்டை சதமாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வந்தது.

மேலும் அவருடைய இந்த பேட்டிங் பங்களிப்பு இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மேலும் தொடரை சமன் செய்வதற்கு இந்த வெற்றி மிக முக்கியமானது.

இந்த வகையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செயல்பாடு மிகுந்த முக்கியத்துவத்தையும், நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கக்கூடிய ஒன்றாகவும் மாறியிருக்கிறது. பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகம் இருந்த காரணத்தினால், பந்துவீச்சில் அசத்திய பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்குப் பின் பேசிய ஜெய்ஸ்வால் கூறும்பொழுது “இது அற்புதமான ஒரு உணர்வு. உங்கள் நாட்டிற்காக நீங்கள் ஒரு போட்டியை வெல்வது என்பது மிகவும் சிறப்பானது. நான் போட்டியை ரசித்து எனது விளையாட்டை விளையாடினேன்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்களுடைய செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினோம். குறிப்பாக நாங்கள் பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

ஆடுகளத்தில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டு இருந்தது. மேலும் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமாக பந்து ஆடுகளத்தில் கொஞ்சம் நகர்ந்தது. இதனால் நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது.

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டுக்கும் நான் இரண்டு வழிமுறைகள் மட்டும் தான் வைத்திருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ஆட்டத்தை எடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் கடைசி வரை நின்று விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : “ஆண்டர்சன் எனக்கு போட்டியா?.. டென்னிஸ் பந்துல முதல்ல செஞ்சதே அதுதான்” – ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

பும்ரா பந்து வீசிய விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. ஸ்லிப் கார்டனிலும் பந்து வேகமாக வந்தது. இரண்டாவது செய்யும் பொழுதும் எனக்கு அதே நோக்கம்தான், புதிய பந்தை பயன்படுத்தி அணிக்கு ரன்கள் கொண்டு வர வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.