“ஆண்டர்சன் எனக்கு போட்டியா?.. டென்னிஸ் பந்துல முதல்ல செஞ்சதே அதுதான்” – ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

0
479
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக மொத்தம் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய பும்ரா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான வகையில் அமைந்திருந்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இங்கிலாந்தின் 6 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணியை சீர்குலைத்தார்.

இதன் காரணமாக இந்திய அணிக்கு 143 ரன்கள் லீடிங் கிடைத்தது. இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிய போதும் இந்த லீடிங்தான் இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதன் காரணமாக இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வாலை தாண்டி பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா கூறும்பொழுது ” நான் எப்பொழுதும் ஆட்டத்தில் எண்களைப் பார்ப்பது கிடையாது. அப்படி பார்த்தால் அது நம் மீது அழுத்தத்தை உண்டாக்கி விடும். வெற்றிக்கு பங்களித்திருக்கிறேன் அது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

போப்புக்கு வீசிய யார்க்கர் என்பது, நான் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிய பொழுது கற்றுக் கொண்ட முதல் விஷயம். விக்கெட் வீழ்த்துவதற்கு அதுதான் வழி என்று நான் உணர்ந்திருந்தேன்.

இந்திய பந்துவீச்சு படைக்கு நான் தலைவர் கிடையாது. ஆனால் ஒரு மாற்றம் அணியில் இருப்பதால் நான் மற்ற பந்துவீச்சாளர்களை வழிநடத்துகிறேன். ரோகித் சர்மாவுடன் நீண்ட காலமாக விளையாடுகிறேன். பொதுவாக நான் என்ன செய்ய வேண்டும்? அவர் என்ன எதிர்பார்க்கிறார்? என்பது குறித்து அவருடன் விவாதிப்பேன்.

எனக்கு ஜிம்மி ஆண்டர்சன் உடன் எந்த போட்டியும் கிடையாது. நான் வேகப்பந்து வீச்சை ரசிக்க கூடியவன். எந்த அணியில் யார் சிறப்பாக செயல்பட்டாலும் நான் அதைப் பார்த்து பாராட்டுவேன்.

இதையும் படிங்க : “அவர் அடக்கமா இருப்பார்னு நம்பறேன்.. 3 போட்டி இருக்கு பாத்துக்கலாம்” – ரோகித் சர்மா பேச்சு

நான் எப்பொழுதும் விக்கெட்டை பார்த்து, அது எப்படி செயல்படுகிறது? என்பதை கணித்து, அதற்கு தீர்வு காண முயற்சி செய்வேன். ஒவ்வொரு விக்கெட்டும் ஒவ்வொரு மாதிரியானது. அதற்கு என்னிடம் இருக்கும் பந்துவீச்சு வகைகளில் சரியானதை பயன்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.