பிராட்மேனுக்கு அடுத்து ஜெய்ஸ்வால் பிரம்மாண்ட சாதனை.. மேலும் பல ரெகார்டுகள்.. முழு விபரம்

0
758
Jaiswal

மார்ச்-7. இந்திய அணிக்கு நீண்ட காலம் கிடைத்து இடது கை துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் கிடைத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்து 80+ ரன் மேல் எடுத்து சதத்தை இந்திய மண்ணில் ஜெய்ஸ்வால் தவறவிட்டிருந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

மேற்கொண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மொத்தம் 655 ரன்கள் 4 போட்டிகள் முடிவில் குவித்திருந்தார்.

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாட வந்தது.

சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் தன்னுடைய ஒன்பதாவது டெஸ்ட் போட்டியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். இந்த வகையில் டான் பிராட்மேன் ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன் அடித்ததே அதிவேக ஆயிரம் ரன்னாக இருக்கிறது. இந்தப் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் ஆக விராட் கோலி 655 ரன்கள் எடுத்திருந்தார். இந்தச் சாதனையை தற்பொழுது ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 700 ரன்கள் கடந்து இருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் இரண்டு முறை கவாஸ்கர் 700 ரன்கள் கடந்த இந்தியராக இருந்திருக்கிறார். அவருக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் கடந்த இந்திய பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ 6,6,6.. “அடுத்த அஸ்வின் நீதானா?”.. சோயப் பஷீரை சொல்லி அடித்த ஜெய்ஸ்வால்.. மீண்டும் சம்பவம்

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 239 நாட்களில் ஆயிரம் ரன்கள் கடந்து, குறைந்த நாட்களில் ஆயிரம் ரன்கள் கடந்த ஆசியா மற்றும் இந்திய வீரராக சாதனை படைத்திருக்கிறார்.