இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி முடிவுக்கு பின் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஐசிசி வெளியிட்டு இருக்கும் இந்த தரவரிசை பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் ஏற்றம் கண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் முதல் டெஸ்ட் வெற்றியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா புதிய உச்சத்தை எட்டி இருக்கிறார்.
ஜோ ரூட்டுக்கு சவால் கொடுக்கும் ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்து 161 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் 825 புள்ளிகள் எடுத்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். முதல் இடத்தில் ஜோ ரூட் 903 புள்ளிகள் உடன் இருக்கிறார். இங்கிலாந்து நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட, இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் இருக்க, தற்போது ஜோ ரூட் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இடையே முதல் இடத்திற்கான போட்டி உருவாகி இருக்கிறது.
மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒன்பது இடங்கள் முன்னேறி 689 புள்ளிகள் உடன் 13 இடத்தை பிடித்திருக்கிறார். இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் முக்கியமான 37 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் 736 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
பும்ரா புதிய உச்சம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் கைப்பற்றி இந்திய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்ற பும்ரா 883 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் தொடர்கிறார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரபாடா 872 புள்ளிகள் உடன் இருக்கிறார். மேலும் முதல் பத்து இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 807 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 794 புள்ளிகள் உடன் ஏழாவதுஇடத்திலும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் விற்காத வீரர்.. 28 பந்தில் அதிரடி சாதனை டி20 சதம்.. ரிஷப் பண்ட் ரெக்கார்ட் உடைந்தது.. சையத் முஸ்டாக் அலி 2024
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங் :
ஜோ ரூட் – 903
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 825
கேன் வில்லியம்சன் – 804
ஹாரி புரூக் – 778
டேரில் மிட்செல் – 743
ரிஷப் பண்ட் – 736
ஸ்டீவன் ஸ்மித் – 726
சவுத் ஷகீல் – 724
கமிந்து மெண்டிஸ் – 716
டிராவிஸ் ஹெட் – 713






