“நான் இரட்டை சதம் அடிக்க இவங்கதான் காரணம்.. நேத்தே முடிவு பண்ணிட்டேன்” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
1409
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட சாதனை வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 131 மற்றும் ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்தார்கள். இதேபோல் இந்திய பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் சிராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 214* ரன்கள், கில் 91 ரன் எடுத்தார்கள். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி 556 ரன்கள் என்கின்ற மெகா இலக்கை நோக்கி விளையாடி 124 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 434 ரன்கள் என்கின்ற பிரம்மாண்ட ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் பேசும் பொழுது ” நான் செட் ஆகும் போதெல்லாம் பெரியவன் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறேன். ஆரம்பத்தில் நான் ரன்கள் எடுக்கவில்லை. இதனால் நான் பந்துவீச்சாளர்களை பார்த்து செஷன் செஷனாக விளையாட வேண்டி இருந்தது.

- Advertisement -

பின்னர் நான் செட் ஆன பிறகு ரன்கள் எடுப்பது சுலபமாக அமைந்தது. எனக்கு எந்தப் பகுதியில் ஷாட் விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்கனவே இருந்தது. நேற்று முதுகுப் பகுதி சரியில்லை. நான் தொடர்ந்து விளையாட விரும்பினாலும் வலி இருந்ததால் விளையாடவில்லை.

இன்று நான் மீண்டும் திரும்ப வந்த பொழுது, களத்தில் கடைசி வரை நின்று போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல முடிவு செய்தேன். ஆரம்பத்தில் விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அணிக்கு நல்ல துவக்கம் தர வேண்டியது என்னுடைய வேலை என்று எனக்கு தெரியும்.

ஏனென்றால் நான் நல்ல துவக்கம் தரும் பொழுது அது நல்ல தாக்கத்தை அணிக்கு உருவாக்கி இருக்கிறது. செட் ஆகி அதை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என எப்பொழுதும் சீனியர்கள் கூறுவார்கள். நான் இப்பொழுது அதையே தான் செய்தேன்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றி.. ஜெய்ஷ்வால் ஜடேஜா ஹீரோஸ்.. இங்கிலாந்து பரிதாப தோல்வி

முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா பாய் இருவரும் சேர்ந்து செசன் செசனாக விளையாடியது என்னை நன்றாக உத்வேகப்படுத்தியது. நான் அதைப் பார்த்து அப்படியே அடுத்து விளையாட முடிவு செய்தேன். இதனால் தான் எனக்கு இந்த போட்டியில் இரட்டை சதம் வந்தது எனக் கூறி இருக்கிறார்.