சேவாக் ஸ்டைலில் ஜெய்ஸ்வால் சதம்.. இந்திய மண்ணில் முதல் முறை.. தனி வீரராக அபாரமான பேட்டிங்

0
435
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் துவக்க இந்திய ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

இந்த போட்டிக்கான நாட்டில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். விசாகப்பட்டின ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான முறையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கடந்த முதல் போட்டி போல் இல்லாமல் இந்த முறை இந்திய துவக்க ஜோடி பொறுமையாக அணுகியது. நன்றாக பொறுமை காட்டி டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் இயல்பில் விளையாடி விக்கட்டை தராமல் இந்த ஜோடி ரன்கள் சேகரித்தது.

ஆனாலும் தவறான ஒரு பந்துக்கு ஆடச்சென்று கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விளையாட வந்த கில் இந்த முறை சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பான முறையில் விளையாடினார்.

ஆனால் அவரது ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஆண்டர்சனை பென் ஸ்டோக்ஸ் கொண்டு வந்தார். இந்த வலையில் விழுந்த கில் தவறான ஷாட் விளையாடி 46 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்திய மண்ணில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்தார். 151 பந்துகளில் 11 கவுண்டர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். சதத்தை அடிப்பதற்கு 94 ரன்கள் இருந்து ஜெய்ஸ்வால் சேவாக் ஸ்டைலில் சிக்ஸ் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் தனது இந்திய மண்ணில் முதல் சதத்தை தவறவிட்டிருந்தார். ஆனால் இன்று மிகச் சிறப்பாக விளையாடிய அவர் சதத்தை எட்டி அசத்தியிருக்கிறார்.