ரோகித்தின் 14 வருட சாதனையை தட்டி தூக்கிய ஜெய்ஷ்வால்.. டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து டி20 யிலும் ருத்ர தாண்டவம்.!

0
553

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது . இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 178 ரன்களை சேர்த்தது . இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதும் சொதப்பி வந்த இந்தியாவின் துவக்க ஜோடி இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடியது. முதலாவது விக்கெட் இருக்கு கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து 165 ரன்கள் சேர்த்தனர். கில் 77 ரன்களில் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் 84 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது டி20 போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய அவர் 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளின் உதவியுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த அரை சதத்தின் மூலம் ரோஹித் சர்மாவின் 14 வருட சாதனையை முறியடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

இந்தியா அணிக்காக இளம் வயதில் டி20 போட்டிகளில் துவக்க வீரராக அரை சதம் எடுத்து சாதனை பட்டியலில் இடம் பெற்று இருந்தார் ரோகித் சர்மா. அவர் 2009 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 22 வயது மற்றும் 41 நாட்களில் அரை சதம் எடுத்தார். இந்த சாதனையை தற்போது ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார். இன்றைய போட்டியில் எடுக்கப்பட்ட அரை சதத்தின் மூலம் ரோஹித் சர்மாவின் 14 வருட சாதனை முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ஸ்வால் 21 வயது மற்றும் 227 நாட்களில் அரை சதம் எடுத்து ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இவர் எடுத்த இந்த அரை சதத்தின் மூலம் இளம் வீரராக டி20 போட்டிகளில் அரை சதம் எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவருக்கு முன்பாக ரோஹித் சர்மா (20 வயது 143 நாட்கள் ), திலக் வர்மா (20 வயது 271 நாட்கள் ) மற்றும் ரிஷப் பந்த் (21 வயது 38 நாட்கள் ) போன்றவர்களுடன் இணைந்தார். ஜெய்ஸ்வால் (21 வயது 227 நாட்கள்).

துவக்க வீரராக இந்திய அணிக்கு இளம் வயதில் அரை சதம் எடுத்த வீரர்கள்:

ஜெய்ஸ்வால் 21 வயது 227 நாட்கள் வெஸ்ட் இண்டீஸ் 2023

ரோஹித் சர்மா 22 வயது 41 நாட்கள் அயர்லாந்து 2009

இஷான் கிஷான் 22 வயது 41 நாட்கள் இங்கிலாந்து 2021

அஜிங்கியா ரகானே 23 வயது 81 நாட்கள் இங்கிலாந்து 2011