வீடியோ.. ஜடேஜா மின்னல் ரியாக்ஷன் டைவ் கேட்ச்.. மெடலை எடுத்து வைங்க.. ஃபீல்டில் நடந்த மாஸ் மொமெண்ட்!

0
1371
Jadeja

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக வித்தியாசமான ஒரு முகத்தை காட்டி வருகிறது.

இன்றைய போட்டியில் தனது முதல் ஓவரை ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் வீசிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முட்டியில் காயம் அடைந்து மேற்கொண்டு பந்து வீச முடியாமல் வெளியேறினார். மீதம் இருந்த மூன்று ஓவர்களை விராட் கோலி வீசினார்.

- Advertisement -

எனவே இந்தப் போட்டியில் சர்தார் குறைந்தபட்சம் ஒன்பது ஓவர்கள் வீசியாக வேண்டிய நிலை இருந்தது. மேலும் பங்களாதேஷ் துவக்க விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து அசத்தியது. நடப்பு உலக கோப்பையில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் தராத அணியாக பங்களாதேஷ் இருந்தது.

போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் முதல் விக்கெட்டை குல்தீப் யாதவ் தன்ஷித் ஹஸனை வீழ்த்தி கொண்டு வந்தார். இதற்குப் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தமாக, பங்களாதேஷ் பேட்டிங் யூனிட் மீது பாய்ந்து விட்டார்கள்.

அடுத்து ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட், முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஒரு விக்கெட் என கைப்பற்ற, பங்களாதேஷ் அணியின் ரன் வேகம் சரிந்து, அவர்கள் 300 ரன்கள் என்பதை மறந்து மொத்தமாக 50 ஓவர் விளையாட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார். அணியை எப்படியாவது கரை சேர்த்து விட அனுபவ வீரர் முஷ்பிக்யூர் ரஹீம் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பும்ரா பந்தை பாயிண்ட் திசையில் அவர் அடிக்க, அங்கு நின்று இருந்த ரவீந்தர ஜடேஜா அதை மின்னல் வேகத்தில் டைவ் செய்து பிடித்து அசத்தினார்.

தற்போது இந்திய அணியில் அந்தந்த போட்டியில் யார் நன்றாக பீல்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சியாளர் தனிப்பட்ட முறையில் மெடல் கொடுத்து வருகிறார். இதன் காரணமாக விளையாட்டாக பந்தை பிடித்து விட்டு, ஜடேஜா தனக்கு மெடல் தரவேண்டும் என்று பீல்டிங் பயிற்சியாளரை நோக்கி சைகை செய்தது சுவாரசியமான நிகழ்வாக இருந்தது.

மேலும் உலகக்கோப்பையில் முதல் மூன்று போட்டிகளை எல்லா அணிகளும் விளையாடி முடித்து இருந்த நேரத்தில், ஐசிசி இம்பேக்ட் ஃபீல்டர்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டது. அதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் இன்று அவர் மொத்தமாக அசத்தி விட்டார்!