பயிற்சிக்கு வந்த ஜடேஜா.. வராத 3 வீரர்கள்.. 2வது டெஸ்டுக்கு முன் புது சர்ச்சை.. குழப்பத்தில் ரசிகர்கள்.!

0
4488

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தாமதமாக பந்து வீசியதின் காரணத்திற்காக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகளை இழந்துள்ளது. இது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

எனவே அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். முதுகு தசைப்பிடிப்பு காரணமாக முதல் போட்டியில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இதனால் இந்திய அணிக்கு முக்கியமாக பேட்டிங் துறையில் சிறிது பலவீனம் ஏற்பட்டது.

- Advertisement -

நெருக்கடியான கட்டத்தில் அவரது வருகை இந்திய அணிக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும். மேலும் கேப் டவுன் ஆடுகளம் சுழற் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். மேலும் இடது கை ஆட்டக்காரரான இவர் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்கும் திறனும் உள்ளது. எனவே இவரது வருகையை இந்திய அணி எதிர்நோக்கி காத்திருக்கும்.

அடுத்த போட்டியில் அஸ்வினின் இடம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அவரால் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்க முடியவில்லை. பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாத காரணத்தால் சார்துல் தாகூர் அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

மேலும் பந்துவீச்சில் சொதப்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக இந்திய ஏ அணியில் தென்னாபிரிக்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஆவேஷ் கான் வருகை தருவது போன்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்த ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். எனவே ஆவேஷ் கான் களமிறங்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க, வலைப்பெயர்ச்சியில் முன்னணி வீரர்களான விராட் கோலி, கே எல் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனை அறிந்த இந்திய ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால் கிடைத்த தகவலின் படி அவர்கள் மூவரும் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இவர்கள் மூவரும் விருப்ப ஓய்வு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அடுத்த போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் சூழ்நிலை உள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் அடுத்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் சமன் செய்ய முடியும். எனவே அதற்கான முன் ஏற்பாடுகளை இந்திய அணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்க அணி அடுத்த போட்டியில் டிரா செய்தாலே போதும். இதனால் அடுத்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.