“இங்கிலாந்தின் கேள்விக்கு ஒரு பதில் கூட இல்ல.. உடம்பு முழுக்க பயம்” – இந்திய வீரர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் விமர்சனம்

0
159
DK

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு நாட்களில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி, மூன்றாவது நாளிலும் முதல் இரண்டு செசன்களில் ஆதிக்கத்தை நீட்டிக்க செய்திருந்தது.

ஆனால் போட்டி முடிந்த கடைசி நான்கு செசன்களில் இந்திய அணியினர் தங்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கைவிட்டு தோல்வியை நோக்கி வேகமாகப் போய் விழுந்தார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டியின் முடிவை இன்றும் கூட சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை வேண்டாம் என்று இந்திய அணி மறுத்துவிட்டது போல விளையாடி முடித்திருக்கிறார்கள்.

இது தொடரின் முதல் டெஸ்ட் போட்டி என்கின்ற காரணத்தினால் இந்திய அணியின் மீது விமர்சனங்கள் நிறைய வந்தாலும், அந்த விமர்சனங்கள் அனைத்தும் கொஞ்சம் கோபம் குறைவானதாக வெளிப்படுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியன் வீர தினேஷ் கார்த்திக் தன்னுடைய விமர்சனத்தை இந்திய அணியின் மீது மிக நேர்மையாக வெளிப்படையாக வைத்து வருகிறார். நடந்து முடிந்த போட்டியில் இந்திய வீரர்களின் மனநிலை குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “இன்றைய நாளை பொருத்தவரையில் இரு அணிகளுக்கும் இடையேயான கலாச்சார வேறுபாடுகள் என்ன மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை குறித்து பேச வேண்டிய நாளாகும். நாம் இந்தியர்களாக வளர்ந்து வரும் பொழுது நம்மில் எங்கேயோ பயம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது.

விளையாட்டைத் தொடர்ந்து பின்பற்றி வரும் ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில சமயங்களில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்மேன்கள் தங்கள் ஷார்ட்களை சுதந்திரமாக விளையாட பயப்படுவார்கள். அதிரடியாக விளையாட விரும்புவார்கள். ஆனால் தோல்வி பயம் அவர்களை விளையாட விடாது.

இந்த டெஸ்ட் போட்டியை பார்த்த பலருக்கும் இந்திய வீரர்கள் கடைசியில் சோர்வாகவும் நம்பிக்கை இழந்தவர்கள் போலவும் இருந்ததை உணர்ந்ததாக தோன்றி இருக்கும். அவர்கள் வெவ்வேறு கட்டத்தில் ஆட்டம் இழந்தார்கள். இங்கிலாந்து அணி கேட்ட ஒரு கேள்விக்கு கூட இந்திய அணி இடம் பதில் இல்லை

இதையும் படிங்க : “எங்களை சுருட்டனும்னு நினைக்கிறிங்க.. சரிபோய் வேற பிளான் பண்ணுங்க” – மார்க் வுட் சவால் பேச்சு

இப்படி கடினமான நேரங்களில் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும். மூன்றாவது நாளில் அப்படித்தான் இங்கிலாந்து தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக இந்தியாவிடம் தீவிரம் இல்லாமல் போய்விட்டது. இதன் பின்விளைவைத்தான் நாம் பார்த்தோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -