“ஜடேஜாவுக்கு மகிபாய் மீதும் சிறிதான வருத்தம் இருந்தது?” – தொடர்ந்து அதிரடியாக பேசி வரும் அம்பதி ராயுடு!

0
402
Ambati

இந்திய கிரிக்கெட்டில் தற்காலத்தில் ஷிகர் தவானுக்கு பிறகு சரியான வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட மிகத் திறமையான வீரர்களில் முக்கியமானவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பதி ராயுடு!

இளையோர் கிரிக்கெட்டில் இருந்து எதிர்காலத்தில் சச்சின் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்தான் அம்பதி ராயுடு. ஆனால் அவரது முன்கோபம் அவரது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. மேலும் ஏதாவது தவறு என்று அவர் நினைத்தால் அதை எதிர்த்துப் பேச, எப்பொழுதும் தயங்காத நபராகவும் இருந்தது அவருக்கு பெரிய பிரச்சனைகளை உண்டாக்கியது.

- Advertisement -

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்து தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டாலும், திடீரென்று 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது இன்று வரையில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

அவரது உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இப்படி இருந்தாலும் ஐபிஎல் தொடரில் அவரது வாழ்க்கை மிக மிக உயர்வான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் மிக வெற்றிகரமான இரண்டு அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகளில் மிக முக்கியமான வீரராக விளங்கி இருக்கிறார்.

மும்பைக்கு விளையாடி சென்னை அணிக்கு வந்த அம்பதி ராயுடு எங்கும் சிறப்பான முறையில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல உதவி அணியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல மிக உயர்ந்த முறையில் தனது கடைசி தொடரை விளையாடி விடைபெற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் அணிக்குள் நிலவிய சில முக்கியமான நேரத்திலான சில முக்கிய பிரச்சினைகள் பற்றி அம்பதி ராயுடு பேசியிருக்கிறார். இதில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் நிலவி வந்த பிரச்சனைகள் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு நடுவே பிரச்சினைகள் இருந்ததா? என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள அம்பதி ராயுடு
“ஜடேஜா மகி பாய் மீது சிறிய அளவில் வருத்தம் கொண்டதாக கூட நான் நினைக்கவில்லை. கடந்த ஆண்டு அணி சிறப்பாக செயல்படாததால் அவர் சோகமாக இருந்தார். அந்த ஆண்டு அனைவரது செயல்பாடுகளுமே நல்ல நிலையில் இல்லை.

மகிபாய் இந்த அணியை வைத்து உருவாக்கியதோடு மேலும் 10, 12 ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜாவையும் உருவாக்கி இருக்கிறார். எனவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தயாரிப்பு. அதனால் என்ன இருந்தாலும், இந்த ஆண்டு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்தும், தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது குறித்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

எதிர்கால கேப்டனாக ருத்ராஜுக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் மகேந்திர சிங் தோனி மற்றும் பிளமிங் மாதிரியானவர்களின் சிறந்த கைகளில் இருக்கிறார். அவரை மகேந்திர சிங் தோனி உருவாக்கும் பொழுது ஏழு முதல் 10 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க முடியும். அவர் நிதானமானவர் அமைதியானவர் மற்றும் மிகவும் திறமையானவர்!” என்று கூறியிருக்கிறார்!