கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்தியாவின் வெற்றிக்காக போராடிய ஜடேஜா.. வேண்டுமென்றே சீண்டிய இங்கிலாந்து வீரர்.. கடுப்பாகி மோதல்.. களத்தில் பரபரப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற இரு அணிகளும் தீவிரமாக உழைத்து வருகிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுக்க இந்திய அணியும் அந்த இலக்கை எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் தடுமாறினர்.

ஜடேஜாவை மோதிய பிரைடன்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் ஆறு ரன்களிலும், கருண் நாயர் 14 ரன்களிலும், ரிஷப் பந்து 9 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 82 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ஜடேஜா மட்டும் தனி ஆளாக போராடி வந்தார்.

அப்போது ஆட்டத்தின் 35 வது ஓவரில் ஜடேஜா ரன் ஓடும்போது பிரைடன் கர்ஸ் குறுக்கே வந்து ஜடஜாவை மோதினார்.இதனால் இருவரும் நிலை தடுமாறினர். இதனை அடுத்து தாம் ஓடும்போது ஏன் குறுக்கே வந்து நின்றீர்கள் என்று ஜடேஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

சமாதனப்படுத்திய நடுவர்:

அப்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் ஜடேஜாவிடம் மோதலில் ஈடுபட்டார். அப்போது, நிலைமை கையை மீறி செல்வதை உணர்ந்த நடுவர் இரண்டு அணி வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரு கேப்டனின் கனவு வீரர் இந்த இந்திய பவுலர்தான்.. கிரிக்கெட்டுக்கு அனைத்தையும் தருகிறார் – கெவின் பீட்டர்சன் புகழாரம்

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் மீது தான் தவறு இருந்ததாகவும், ஆனால் ஜடேஜா இந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டு பவுலரிடம் தனது விளக்கத்தை கொடுத்து பிரச்சனையை சமாதானப்படுத்தியதாக கூறினார். ஜடேஜா நினைத்திருந்தால் இந்த மோதலை பெரிதாக்கி இருக்கலாம். ஆனால் அவர் கூலாக கையாண்டார் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts