இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர் குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிறப்பான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் முதலில் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுக்க, அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியும் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸிலும் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இங்கிலாந்து அணி சரிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் கேப்டனின் ஒரு கனவு வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஒரு கிரிக்கெட் வீரராக முகமது சிராஜை நான் மிகவும் விரும்புகிறேன். அவரை கொஞ்ச நாளாக எனக்கு மிகவும் பிடித்து வருகிறது. அவர் தனது இதயத்தை கையில் ஏந்தி, தான் வீசும் ஒவ்வொரு பந்துவீச்சுக்கும் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாக கொடுக்கிறார். இவர் ஒரு கேப்டனின் கனவு வீரர்” என பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க:நிலைமை கை மீறி போயிருச்சு.. இந்திய அணியில் அந்த 2 பேர் மனசு வச்சா மட்டுமே ஜெயிக்க முடியும் – அஸ்வின் கணிப்பு
கடந்த மூன்று போட்டிகளாகவே சிராஜ் தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இன்னும் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






